ஐபிஎல் 2024

உடம்பு முடியாமதான் போட்டிக்கு வந்தேன்.. ஒரு மாற்றம்தான் ரொம்ப கஷ்டமா இருக்கு – முகமது சிராஜ் பேட்டி

இன்று தங்களது சொந்த மைதானத்தில் குஜராத் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி பிளே ஆஃப் வாய்ப்பில் இன்னும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. இன்றைய போட்டியில் பந்துவீச்சில் மிகச் சிறப்பான துவக்கத்தை ஆர்சிபி அணிக்கு தந்த முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருது வென்று, போட்டிக்கு தயாரான விதம் குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இன்றைய போட்டியில் டாஸ் தோற்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு தமிழக வீரர் ஷாருக்கான் அதிகபட்சமாக 24 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து, பரிதாபமான முறையில் விராட் கோலி கையால் ரன் அவுட் ஆனார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு பவர் பிளேவில் 92 ரன்கள் வந்தது. முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கும் 92 ரன் வந்தது. சிறப்பாக விளையாடிய ஆர் சி பி கேப்டன் பாப் டு பிளேசிஸ் வெறும் 23 பந்தில் பவர் பிளேவிலேயே 64 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

இவருடன் சேர்ந்து அதிரடியாக ஆரம்பித்த விராட் கோலி 27 பந்தில் 41 ரன்கள் எடுத்தார். திடீரென ஆர்சிபி அணி 117 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து விட்டது. திடீரென அந்த அணிக்கு நெருக்கடி ஏற்பட்டாலும், ரஷித் கான் ஓவரை சிறப்பாக விளையாடி 12 பந்தில் 21 ரன்கள் எடுத்த தினேஷ் கார்த்திக், ஆர்சிபி அணியை 13.4 ஓவரில், நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தான்.

- Advertisement -

இந்தப் போட்டியில் 4 ஓவர்களுக்கு 29 ரன்கள் தந்து கில் மற்றும் சகா விக்கெட்டை கைப்பற்றிய முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருது வென்றார். பிறகு அவர் பேசும் பொழுது ” கடந்த சில நாட்களாக நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தேன். இன்று என்னால் விளையாட முடியாது என்று நினைத்தேன். ஆனால் விளையாட வேண்டும் என்று விரும்பினேன்.

இதையும் படிங்க : 4 விக்கெட் விழுந்ததும் பயமாயிடுச்சு.. பவுலருக்கு ஒரு மெசேஜ் மட்டும் சொல்ல விரும்பினேன் – பாப் டு பிளேசிஸ் பேட்டி

ஆனால் இன்று காலை எழுந்ததும் விளையாட முடியாது என்று தான் நினைத்தேன். பிறகு ஓரளவுக்கு சுமாராக உணர்ந்ததும் நான் விளையாடுகிறேன் என்று தெரிவித்தேன். இன்று பந்துவீச்சில் சிறப்பாக வந்து வெற்றி பெற்றது கடந்த ஆண்டை நினைவுபடுத்துகிறது. நான் அதிகம் சிவப்பு பந்தில் விளையாடுகின்ற காரணத்தினால், எனக்கு வெள்ளை பந்துக்கு மாறுவது கடினமாக இருக்கிறது. ஆனால் இன்று சிறப்பாக மாறி வந்திருக்கிறேன். மேலும் வெள்ளைப் பந்தில் ஒவ்வொரு பந்துக்கும் 110 சதவீதம் கொடுக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

Published by