பவுமாவின் காலில் பந்தை எறிந்த சிராஜ் ; தடைப்பட்ட ஆட்டத்திற்கு இடையே பும்ராவுடன் உரையாடல் – வீடியோ இணைப்பு

0
1923
Siraj throwing Ball at Bavuma

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்கா நாட்டிற்குச் சென்று அங்கு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னரே ஆரம்பிக்க வேண்டிய டெஸ்ட் தொடர் கொரோனா காரணமாக கடந்த 26ஆம் தேதி தொடங்கியது. தென் ஆப்பிரிக்கா நாட்டில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றது இல்லை என்பதாலும் தற்போது கோலி தலைமையிலான அணிக்கு அதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதாலும் இந்த தொடர் ஆரம்பிக்கும் முன்னரே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதேபோல இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானம் செய்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களான ராகுல் மற்றும் மயங்க் இணைந்து சிறப்பான துவக்கத்தை இந்திய அணிக்கு கொடுத்தனர்.

அதைப் பயன்படுத்தி இந்திய அணி முதல் இன்னிங்சில் 327 ரன்கள் குவித்தது. அதன் பிறகு தென் ஆப்பிரிக்க அணி இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் வேகத்தில் சீட்டுக்கட்டு போல் சரிந்தது. அவரின் வேகத்திற்கு ஈடு செய்ய முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி மொத்தம் 197 ல்தான் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களின் கேப்டன் பவுமா 52 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் மடமடவென விக்கெட்டுகளை இழந்தாலும் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்று இருந்ததன் காரணமாக வலுவான நிலையிலேயே இருந்தது.

- Advertisement -

305 என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு மீண்டும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகமாக தொல்லை கொடுத்தனர். அந்த அணியின் கேப்டன் எல்கர் மற்றும் பவுமா சிறிது நேரம் தாக்குப் பிடித்தாலும் மற்ற வீரர்கள் யாரும் எந்த ஒரு தடுப்பாட்டத்தையும் வெளிப்படுத்தவில்லை. உணவு இடைவேளைக்கு சிறிது நேரம் முன்பு 62வது ஓவரை வீசிய சிராஜ் பவுமா அடித்த பந்தை தடுத்து ஸ்டம்புகளை நோக்கி வீசுகிறான் என்றும் பவுமாவின் கால்களை குறிவைத்து எறிந்தார். அவர் வலியில் துடிக்கவே ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது.

தென்ஆப்பிரிக்க அணியின் மருத்துவர் அவரை கவனித்துக் கொண்டிருந்த வேளையில், இந்திய வீரர்கள் எல்லாம் சிராஜை செல்லமாக கண்டித்து கொண்டிருந்தனர். அப்போது பும்ரா மற்ற அணி வீரர்களை பார்த்து ஸ்டம்பில் மைக் உள்ளது நாம் பேசுபவை அனைத்தும் பதிவாகிக் கொண்டு இருக்கும் என்று கூறிச் சென்றார். அடுத்த 2 டெஸ்ட் போட்டியில் முக்கிய விக்கெட் கீப்பராக தென் ஆப்பிரிக்க அணியின் டீகாக் இல்லாத காரணத்தினால் அந்த இரண்டையும் வெல்ல இந்திய அணிக்கு தற்போது அதிக வாய்ப்புகள் இருக்கிறது