சிங்கத்தைப் போல் கர்ஜித்த ஷுப்மன் கில் ; சிக்ஸர் மூலம் ஆட்டத்தை முடித்து யாரும் படைக்காத சாதனையை நிகழ்த்தியுள்ள கில் – வீடியோ இணைப்பு

0
101
David Miller and Shubman Gill Celebration

கொரோனோ தொற்று தீவிரம் கட்டுக்குள் வந்த பிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்த இண்டு ஐ.பி.எல் தொடர் முழுமையாக நடந்து முடிந்திருக்கிறது. பெரிதாக இயல்பு வாழ்க்கையை இழந்திருந்த மக்களில் பெரும்பாலோனோருக்கு இந்த ஐ.பி.எல் தொடர் ஒரு நல்ல மாற்றமாகவே இருந்தது!

குஜராத்தின் அகமதாபாத் நகரின் நரேந்திர மோதி மைதானத்தில் மாலை 6.30 மணிக்கு பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் நடனம், ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரியோடு, ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் இறுதிபோட்டி குஜராத், ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே துவங்கியது.

- Advertisement -

டாஸில் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் ஜோஸ் பட்லரை தவிர எந்தவொரு பேட்ஸ்மேனும் குறிப்பிடும்படியான பங்களிப்பைத் தரவில்லை. ராஜஸ்தான் கேப்டனின் முடிவை போலவே, ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களின் செயல்பாடும், ராஜஸ்தான் அணியின் இரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவே அமைந்தது. இதனால் நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 130 ரன்களையே எடுத்தது.

அடுத்து 131 என்று எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணிக்கு ராஜஸ்தான் பவுலர்களும் நெருக்கடியைத் தந்தனர். இதனால் குஜராத் அணியால் பவர்-ப்ளேவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 31 ரன்களைகளே எடுக்க முடிந்தது. ஆனால் அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சுப்மன் கில்லோடு இணைந்து சிறப்பாக அணியை மீட்டெடுத்தார். இவர் இருவரும் இணைந்து 63 ரன்கள் பார்ட்னர் ஷிப் அமைத்தனர். ஹர்திக் பாண்ட்யா 30 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து சாஹல் பந்தில் வெளியேற, அடுத்து வந்த மில்லர் 19 பந்துகளில் 32 ரன்கள் எடுக்க, இறுதிவரை நின்ற சுப்மன் கில் சிக்ஸர் அடித்து 18.1 ஓவரில் குஜராத் அணியை வெல்ல வைத்தார். இதுவரை ஐ.பி.எல் வரலாற்றில் யாரும் சிக்ஸர் அடித்து அணியை வெல்ல வைத்தது கிடையாது. சுப்மன் கில்லின் இந்த வெற்றி சிக்ஸர் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி போட்டியில் மகேந்திர சிங் தோனி சிக்ஸ் அடித்து ஆட்டத்தை நிறைவு செய்ததைப் போல இருந்தது.

- Advertisement -

2018ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் விளையாடி வரும் இவரை இந்த ஆண்டு குஜராத் அணி ஏலத்திற்கு முன்பாகவே வாங்கி தக்கவைத்தது. இவரது பேட்டிங் ஸ்ட்ரைக்ரேட் ஒரு பிரச்சினையாக பேசப்பட்டு இருக்க, இந்த முறை 16 ஆட்டங்களில் 483 ரன்களை 132 என்ற ஸ்ட்ரைக்ரேட்டில் அடித்திருக்கிறார். கடந்த இரு ஆண்டுகளில் இவரது பேட்டிங் ஸ்ட்ரைக்ரேட் 117.96, 118.90யே ஆகும். இவர் பேட்டிங் ஸ்ட்ரைக்ரேட்டை அதிகரிப்பது குறித்து, இந்த ஐ.பி.எல் தொடரின் துவக்கத்தில் பிரபல இந்திய அதிரடி வீரர் சேவாக் அறிவுரை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -