வீடியோ: மரண மாஸான கேட்ச் பிடித்து இந்திய ரசிகர்களை கதிகலங்க செய்த வெஸ்ட் இண்டீஸ் வீரர், அதிர்ச்சியில் அப்படியே நின்ற தவான்! விடியோ உள்ளே…

0
67

இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது தவான் அடித்த பந்தை அசாத்தியமாக கேட்ச் பிடித்து இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கைல் மேயர்ஸ்.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. இந்த போட்டியில் தோல்வியை தழுவினால், தொடரை இழந்து விடுவோம் என்பதால் மேற்கு இந்திய தீவுகள் வீரர்களின் பேட்டிங்கில் நிதானம் காணப்பட்டது.

- Advertisement -

தனது நூறாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கும் துவக்க வீரர் சாய் ஹோப் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 115 ரன்கள் ஆட்டம் இழந்தார். மேலும் கேப்டன் பூரான் 74 ரன்கள் அடித்திருந்தார். மற்ற வீரர்களும் தங்களது பங்களிப்பை கொடுக்க 50 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்திருந்தது மேற்கிந்திய தீவுகள் அணி.

சற்று கடினமான இலக்கை துரத்திய இந்திய அணிக்கு நல்ல பார்மில் இருக்கும் தவான் மிகச்சிறப்பான துவக்கம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டபோது, போட்டியின் 11 வது ஓவரில் ஷெப்பர்ட் வீசிய பந்தை பின்னோக்கி அடிக்க முயற்சித்த போது, பவுண்டரி அருகே மேயர் அபாரமாக தாவி அசாத்தியமான கேச்சை பிடித்து ஆட்டம் இழக்கச் செய்தார். நிச்சயம் பவுண்டரி சென்று விடும் என எதிர்பார்த்திருந்த தவானுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் பலர் இந்த சம்பவத்திற்கு பிறகு சிறிது நேரம் அதிர்ச்சியில் மிகுந்த அமைதியுடன் காணப்பட்டனர். தவான் 13 ரன்களுக்கு வெளியேறினார்.

அதன் பிறகு வந்த ஷ்ரேயாஷ் 63 ரன்களும் சஞ்சு சாம்சன் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி நிச்சயம் தோல்வியை தழுவி விடும் என அனைவரும் நினைத்துக்கொண்டிருந்த தருணத்தில் ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேல் களமிறங்கி, பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசி இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தார். அவர் 35 பந்துகளில் 65 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 5 சிக்ஸர்கள் மூன்று பவுண்டரிகள் அடங்கும். 

- Advertisement -

நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 49.4 ஓவர்களில் (312/8) எட்டிய இந்திய அணி வெற்றியை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. பந்துவீச்சில் ஒரு விக்கெட், பேட்டிங்கில் முக்கியமான நேரத்தில் அரைசதம் என இரண்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட்ட அக்சர் பட்டேல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டி வருகிற ஜூலை 27ஆம் தேதி ட்ரினிடாட் மைதானத்தில் நடக்கவுள்ளது.