ஒரு ரன்னில் சதத்தை நழுவவிட்ட கெய்க்வாட் ; வருத்தத்துடன் நடந்து சென்றவரை தோளில் தட்டி வழி அனுப்பிய வில்லியம்சன் – வீடியோ இணைப்பு

0
350
Ruturaj Gaikwad 99 vs SRH

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 34வது போட்டியில், டபள் ஹெட்டர் நாளின் இரண்டாவது போட்டியில், மகாராஷ்ட்ராவின் புனே மைதானத்தில், தோனி மீண்டும் தலைமையேற்று இருக்கும் சென்னை அணியும், கேன் வீல்லியம்சனின் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன!

ஹைதராபாத் அணி தரப்பில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. சென்னை அணி தரப்பில் பிராவோ, ஷிவம் துபேவுக்குப் பதிலாக கான்வோ, சிமர்ஜித் சிங் இடம்பெற்று இருந்தார்கள். ஹைதராபாத் அணி எட்டு ஆட்டங்களில் ஐந்தை வென்று பத்துப்புள்ளிகளோடு, புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கிறது. சென்னை அணி எட்டு ஆட்டங்களில் இரண்டு ஆட்டங்களை மட்டுமே வென்று, நான்கு புள்ளிகளோடு, புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் பின்தங்கி, இனி அடுத்த ஆறு ஆட்டங்களில் வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

- Advertisement -

டாஸை வென்ற கேன்வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்ய, சென்னை அணிக்காகக் களம்புகுந்த கான்வோ-ருதுராஜ்ஜோடி முதலில் பதுங்கி, பின்பு பாய ஆரம்பித்தது. குறிப்பாக ருதுராஜின் ஆட்டத்தில் பழைய ருதுராஜை பார்க்க முடிந்தது. அதிவேக உம்ரான் மாலிக்கை குறி வைத்து தாக்கி, அவரது ஓவரில் பவுண்டரி அடித்து அரைசதத்தை எட்டினார்.

தொடர்ந்து ஆடிய ருதுராஜின் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஒருபுறத்தில் அவருக்கு கான்வோ சிறப்பான ஒத்துழைப்பை தந்தார். உம்ரான், யான்சென் ஓவர்களை தொடர்ந்து தாக்கி சதத்தை நோக்கி வேகமாக முன்னேறினார். இந்த நிலையில் 96 ரன்களில் இருந்த ருதுராஜ்., நடராஜனின் 18வது ஓவரின் முதல் பந்தில் இரண்டு ரன்களும், அடுத்த பந்தில் ஒரு ரன்னும் எடுத்து 99 ரன்களுக்கு போக, கான்வோ உடனே ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை ருதுராஜிற்கு தப்தார், ஆப்-ஸைட் கொஞ்சம் வெளியில் நடராஜன் வீசிய பந்தை, தட்டி ஒரு ரன் எடுக்க ருதுராஜ் முயற்சிக்க, அது நேராக புவனேஷ்குமார் கையில் கேட்ச்சாக, 57 பந்துகளில் 99 ரன்களில் ருதுராஜ் ஆட்டமிழந்தார். இதில் ஆறு பவுண்டரிகளும், ஆறு சிக்ஸர்களும் அடங்கும். வழக்கம்போல் கேன் வில்லியம்சன் ருதுராஜை தேற்றும் விதமாக பாராட்டி வழியனுப்பி வைத்தார்!