வீடியோ: முதல் ஒவர் முதல் பந்தில், கடும் கோபமடைந்த ரோகித் சர்மா.. கொப்பளித்த கேட்ட வார்த்தை.. அப்படி என்ன நடந்தது? – இதோ!

0
228

இரண்டாவது ஒருநாள் போட்டியின் முதல் பந்து வீசப்பட்ட உடனேயே கடும் கோபம் அடைந்தார் ரோகித் சர்மா. இதற்கான காரணம் மற்றும் வீடியோவை கீழே பார்ப்போம்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இரண்டாவது போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஏனெனில் இந்த மைதானத்தில் பத்துக்கு ஏழு முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றிருக்கிறது. இந்த விஷயத்தில் இந்திய அணி சற்று பின்னடைவை சந்தித்து இருக்கிறது என்று கூறலாம்.

இன்றைய இந்திய அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியது. முதலாவதாக இஷான் கிஷன் வெளியில் அமர்த்தப்பட்டு கேப்டன் ரோகித் சர்மா உள்ளே வந்திருக்கிறார். சர்துல் தாக்கூர் வெளியில் அமர்த்தப்பட்டு அக்சர் பட்டேல் உள்ள எடுத்துவரப்பட்டிருக்கிறார்.

இதனையடுத்து இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களம் கண்டனர். போட்டியின் முதல் ஓவரை ரோகித் சர்மா எதிர்கொண்டார். ஸ்டார்க் முதல் பந்தை வீசிய பிறகு, கடுமையாக கோபம் அடைந்திருக்கிறார் ரோகித் சர்மா. அப்போது தகாத வார்த்தைகளும் அவரிடம் இருந்து வந்திருந்தன.

- Advertisement -

இதற்கான காரணத்தை பார்த்தபோது, மைதானங்களில் நடுவே நடக்கும் விஷயங்களை படம்பிடிக்க பறந்து கொண்டிருக்கும் ஸ்பைடர் கேமரா ரோகித் சர்மாவின் பேட்டிங்கை டிஸ்டர்ப் செய்யும் அளவிற்கு இருந்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்து இவ்வாறு கத்தியுள்ளார். இந்த வீடியோவை கீழே பார்ப்போம்.

இரண்டாவது ஒருநாள் போட்டியை பார்க்கையில், பேட்டிங் செய்து வரும் இந்திய அணி முதல் போட்டியில் மிட்ச்சல் ஸ்டார்க்கிடம் எப்படி தடுமாறியதோ, அதேபோல இந்த போட்டியில் மிகவும் தடுமாறியது. கில், ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை ஸ்டார்க்கிடம் இழந்தனர். 32 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது.