இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வென்று கோப்பையை ஜெயதேவ் ஷாவிடம் கொடுத்த ரோஹித் ; யார் இந்த ஜெயதேவ் ஷா – வீடியோ இணைப்பு

0
3678
Rohit Sharma handing trophy to jayadev shah

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டி கொண்ட தொடர் நேற்று நடந்து முடிந்தது. முதல் இரண்டு போட்டிகளில் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே குவித்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷனங்கா 74* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

பின்னர் விளையாடிய இந்திய அணி 16.5 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்கள் குவித்து இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி கண்டது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 73*ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதுமட்டுமின்றி தொடர்ந்து மூன்று போட்டியிலும் அரைசதம் குவித்து (57,74,73*) மொத்தமாக 204 ரன்கள் குவித்த ஸ்ரேயாஸ் ஐயர் தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார். கேப்டன் ரோஹித் தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 3 டி20 தொடர்களை கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது. அதேபோல தொடர்ச்சியாக இந்திய அணி 12 டி20 போட்டிகளில் வென்று ஆப்கானிஸ்தான் அணியை செய்த சாதனையை நேற்று சமன் செய்துள்ளது.

கோப்பையை கைப்பற்றி ஜெயதேவ் ஷா கையில் கொடுத்த ரோஹித் ஷர்மா

முன்னாள் பிசிசிஐ செயலாளரின் மகனான ஜெகதேவ் ஷா, சௌராஷ்டிரா அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். 120 பர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 10 சதம் மற்றும் 12 அரைசதம் உட்பட மொத்தமாக 5354 ரன்கள் குவித்திருக்கிறார்.

- Advertisement -

சௌராஷ்ட்ரா அணியின் கேப்டனாக விளையாடிய அவர் இன்று அதே சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தன்னுடைய பணியை செய்து வருகிறார். இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு பிசிசிஐ தரப்பு பிரதிநிதியாக ஜெயதேவ் ஷாவை பிசிசிஐ நிர்வாகம் தேர்வு செய்திருந்தது.

3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி இலங்கையை 3-0 என்கிற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கோப்பையை கைப்பற்றியதும் நேரடியாக சென்று இந்த தொடரின் பிரதிநிதியான ஜெயதேவ் ஷாவிடம் ஒப்படைத்தார்.

அந்த காட்சி இந்திய ரசிகர்கள் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்த்து. இது சம்பந்தமாக பேசிய ஜெயதேவ் ஷா எனக்கு இந்த வாய்ப்பை அளித்த பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிற்க்கு நன்றி என்று கூறினார்.

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடந்து முடிந்த நிலையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வருகிற மார்ச் 4ம் தேதி முதல் நடைபெற இருக்கின்றது. மார்ச் 4ஆம் தேதி நடைபெற இருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டி என்பதால் அந்த டெஸ்ட் போட்டியை காண விராட் கோலி ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.