இந்த கொண்டாட்டத்திற்கு இது தான் காரணம் ; சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பற்றி தமிழில் பேசிய ராபின் உத்தப்பா

0
227
Robin Uthappa in Starsports Tamil

நேற்று நடந்த முடிந்த முதல் குவாலிபயர் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நேரடியாக இறுதிப் போட்டிக்கும் அந்த அணி தகுதி அடைந்துள்ளது.

டெல்லி அணி நிர்ணயித்த 173 ரன் இலக்கை நோக்கி சென்னை அணி விளையாட தொடங்கிய சில நிமிடங்களில், அந்த அணியை ஓபனிங் வீரர் டுப்லஸ்ஸிஸ் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த உத்தப்பா ருத்துராஜுடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 44 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் என 63 ரன்கள் குவித்தார். நேற்று அரை சதம் அடித்தவுடன் ராபின் உத்தப்பா பாபா படத்தில் ரஜினி காட்டும் முத்திரையை போல் காண்பித்து கொண்டாடினார்.

- Advertisement -

அந்தக் கொண்டாட்டத்திற்கு பின்னிருக்கும் காரணம் இதுதான்

தான் அப்படி செய்கை காண்பித்து கொண்டாடியதற்கு ஒரு காரணம் உள்ளது என்று ராபின் உத்தப்பா நேற்று போட்டி முடிந்ததும் விளக்கி கூறினார். அணியின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதத்தில் தான் அந்த முத்திரையை அரை சதம் அடித்தவுடன் காண்பித்ததாக கூறினார்.

நேற்றைய போட்டியில் மைதானம் ஒரு பக்கத்தில் நீளமாகவும் மறுபக்கத்தில் சற்று குறைவாகவும் இருந்தது. எனவே முடிந்தவரை மைதானத்தின் அளவை பயன்படுத்திக்கொண்டு பவுண்டரிகளை படிப்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். 6 ஓவர் முடிவில் அணி சிறப்பான நிலையில் இருந்தது. மேலும் நான்கு ஓவர்களுக்கு இதேபோல் சிறப்பாக விளையாடி முடிந்தவரை ரன்களைக் குவிப்பதில் தீவிரமாக இருந்தோம். நாங்கள் நினைத்தது நேற்று நிறைவேறியது என்று ராபின் உத்தப்பா மகிழ்ச்சியுடன் கூறினார்.

கொல்கத்தா அணிக்கு அடுத்தபடியாக சென்னை அணியில் நான் பாதுகாப்பாக உணர்கிறேன்

ராபின் உத்தப்பா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரை விளையாடினார். குறிப்பாக 2014ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வெல்ல ராபின் உத்தப்பா மிகப்பெரிய அளவில் உதவினார். அந்த தொடரில் 189 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை உத்தப்பா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நேற்று பேசிய அவர் கொல்கத்தா அணிக்கு அடுத்தபடியாக நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிகவும் பாதுகாப்பாக உணருகிறேன் என்று கூறினார். கொல்கத்தா அணியில் எப்படி சந்தோசமாக இருந்தேனோ அதே போல இங்கே நான் சென்னை அணி வீரர்களுடன் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன் என்றும் ராபின் உத்தப்பா நேற்று கூறினார்.