ஆட்டம் முடிந்ததும் தோனி மற்றும் ரெய்னாவின் பேட்டை வாங்கிச் சென்ற சென்னை வீரர் – ரசிகர்கள் நெகிழ்ச்சி

0
497
Robin Uthappa and Suresh Raina

கடந்த 24ம் தேதி நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. ஆட்டம் அமீரகத்தில் உள்ள ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. சிறிய மைதானம் என்பதால் மாற்றத்தின் பவுண்டரிகளும் சித்தர்களும் வந்த வண்ணமாகவே இருக்கும் என்று ரசிகர்கள் நினைத்தனர். டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங் தேர்வு செய்தார். பேட்டிங் செய்த பெங்களூரு அணிக்கு கோலி மற்றும் படிக்கல் இணைந்து சிறப்பான துவக்கம் கொடுத்தனர். இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.

முதல் விக்கெட்டுக்கு 111 ரன்கள் இந்த இணை சேர்த்தது. கண்டிப்பாக 200 ரன்களுக்கு மேல் பெங்களூரு அணி அடிக்கும் என்று ரசிகர்கள் நினைத்த நிலையில் பெங்களூரு அணியின் பின்வரிசை பேட்டிங் வீரர்கள் அதிகமாக கண்கள் சேர்க்காததால் 20 ஓவர்கள் முடிவில் வெறும் 156 ரன்கள் மட்டுமே பெங்களூரு அணி எடுத்தது. சென்னை அணியின் டுவைன் பிராவோ சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்

- Advertisement -

அதன்பிறகு களம் கண்ட சென்னை அணியின் துவக்க வீரர்களான டூப்ளெஸிஸ் மற்றும் கெய்க்வாட் இணை சிறப்பாக விளையாடியது. முதல் விக்கெட்டை வீழ்த்துவதற்கு முன்னரேயே கிட்டத்தட்ட ஆட்டம் சென்னை அணியின் பக்கம் சென்று விட்டது. அதன் பிறகு விரைவாக 2 விக்கெட்டுகளை பெங்களூரு அணி எடுத்தாலும் சென்னை அணியின் மிடில் ஆர்டர் வீரர்களான ராய்டு மற்றும் மொயின் அலி இணைந்து சென்னை அணியை வெற்றியின் பக்கம் அழைத்துச் சென்றனர்.

இந்த இருவரும் கடைசி நேரத்தில் அவுட்டாகி விட்டாலும் சென்னை அணியின் சீனியர் வீரர்களான கேப்டன் தோனி மற்றும் ரெய்னா இணைந்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தனர். கடந்த பல ஆண்டுகளாக சென்னை அணியின் பேட்டிங் முகமாக இருக்கும் இந்த இரண்டு வீரர்களையும் ஒரே நேரத்தில் களத்தில் பார்த்தது பல ரசிகர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது.

ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்த பிறகு தோனி மற்றும் ரெய்னா இருவரும் பெவிலியன் திரும்பினர். அப்போது முன்னாள் ராஜஸ்தான் அணி வீரரும் தற்போது சென்னை அணியில் இருக்கும் வீரருமான ராபின் உத்தப்பா தோனி மற்றும் ரெய்னா என இருவரிடமிருந்தும் பேட் மற்றும் ஹெல்மெட் இது இரண்டையும் வாங்கிக் கொண்டு சென்றார். இதுவரை சென்னை அணிக்காக ஒரு ஆட்டத்தில் கூட விளையாட உத்தப்பா எந்த ஒரு மனக்கசப்பும் இல்லாமல் சீனியர் வீரர்களின் சுமையை தாங்கி சென்றார். உத்தப்பாவின் இந்த செயலைக் கண்ட ரசிகர்கள் இதை தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்

- Advertisement -