ஒற்றைக் கையில் ஹெலிக்காப்டர் சிக்ஸ் – அதிரடி அரை சதம் விளாசி தோனியின் சாதனையை முறியடித்துள்ள பண்ட்

0
2750
Pant One hand helicopter Six

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று நிலையில் தற்போது 2வது டி20 போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 45 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் 7 பவுண்டரி உட்பட 52 ரன்கள் குவித்தார். விராட் கோலியை போன்றே 28 பந்துகளில் 7 ஒரு சிக்சர் மற்றும் 7 பவுண்டரி அடித்து 52* ரன்களுடன் இறுதி வரை பண்ட் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஒற்றை கையில் சிக்சர் அடித்த ரிஷப் பண்ட்

இந்திய அணி 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்திருந்தது. 19-வது ஓவரை ஜேசன் ஹோல்டர் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை ரிஷப் பண்ட் மேற்கொண்டார். அவர் வீசிய முதல் பந்தை ஒற்றை கையிலேயே லாவகமாக வைட் லாங் ஆன் திசைகளில் ரிஷப் பண்ட் பறக்கவிட்டார்.

ரிஷப் பண்ட் ஒற்றைக் கையில் நிறைய சிக்சர்கள் அடித்து நாம் பார்த்திருக்கிறோம். நீண்ட நாட்களாகவே அவர் ஒற்றைக்கை கொண்டு அடிக்கும் சிக்சரை நாம் பார்க்காமல் இருந்த நிலையில், இன்று ஜேசன் ஹோல்டர் வீசிய அதிவேகமான பந்தில் அவர் அவ்வாறு அடித்தது இந்திய ரசிகர்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்தியது. அவர் அவ்வாறு ஒற்றைக் கையில் சிக்சர் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூலம் மூன்றாவது அரை சதத்தைப் பதிவு செய்து தோனியின் சாதனையை ( 2 அரை சதம் ) முறியடித்துள்ளார்.

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடிக் கொண்டிருக்கிறது. அந்த அணியின் ஓபனிங் வீரர்கள் பிராண்டன் கிங் மற்றும் கைல் மேயர்ஸ் அதிரடியான துவக்கத்தை தற்பொழுது தந்து கொண்டிருக்கின்றனர். 4 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி எந்தவித விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்த நிலையில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.