15 விநாடிகள் முடிந்ததால் டி.ஆர்.எஸ் ரிவ்யூ பயன்படுத்த அனுமதி மறுப்பு ; மைதானத்தை விட்டு வெளியேறாமல் நடுவருடன் விவாதம் நடத்திய ரிங்கு சிங் – வீடியோ இணைப்பு

0
539
Rinku Singh DRS Controversy

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 61வது போட்டியில், கேன் வில்லியம்சனின் ஹைதராபாத் அணியும், ஸ்ரேயாஷின் கொல்கத்தா அணியும், மஹாராஷ்ட்ராவின் புனே மைதானத்தில் தற்போது மோதி வருகின்றன. இரண்டு அணிகளில் கொல்கத்தா அணி ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது குறிப்பிடத்தக்க விசயம்!

புள்ளி பட்டியலில் ஹைதராபாத் அணி 11 ஆட்டங்களில் 5 ஆட்டங்களை வென்று, பத்துப் புள்ளிகளோடு, ப்ளே-ஆப்ஸ் சுற்றில் நுழைய, இனி அடுத்த மூன்று ஆட்டங்களிலும் சிறப்பாக வெல்ல வேண்டுமென்ற கட்டாயத்தில் இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் அணிக்குள் நடராஜன், யான்சென் திரும்பி வந்திருந்தனர். கொல்கத்தா அணியில் ஐ.பி.எல் தொடரிலிருந்து பேட் கம்மின்ஸ் வெளியேறி இருக்க, உமேஷ் யாதவ் வந்திருந்தார்.

- Advertisement -

முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஷ் தைரியமாக பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். துவங்க வீரர்களாக வந்த வெங்கடேஷை யான்சென் வெளியேற்ற, அடுத்த மூன்று விக்கெட்டுகளை இந்தியாவின் அதிவேக பவுலர் உம்ரான் மாலிக் வெளியேற்றினார்.

இதையடுத்து இங்கிலாந்தின் பில்லிங்சும், ரிங்கு சிங்கும் அணியை சரிவிலிருந்து மீட்க முயற்சி செய்ய, நடராஜன் ரிங்கு சிங்கிற்கு அருமையான யார்க்கர் ஒன்றை, ஆட்டத்தின் 11.4 ஓவரில் இறக்கினார். இதைத் தவறவிட்டு ரிங்கு சிங் கால் காப்பில் வாங்க, நடராஜன் அவுட்டிற்கு முறையிட, அம்பயர் தாமதமாக அவுட் தந்தார். இதற்குப் பிறகு மேல் முறையீடு செய்ய தரப்படும் 15 நொடிகளுக்குள் முறையீடு செய்யாமல், ரிங்கு சிங் பில்லிங்ஸிடம் ஆலோசனை செய்து கொண்டிருக்க, அம்பயர் நேரம் கடந்து விட்டதைக் குறிப்பிட்டு, ரிங்கு சிங்குவை களத்திலிருந்து வெளியேற கூறினார்.

ஆனால் ரிங்கு சிங் தான் முன்பே முறையீடு செய்துவிட்டதாகக் கூறி விவாதம் நடத்த, அம்பயர்கள் ஒருவழியாக அவரை வெளியே அனுப்பி வைத்தார்கள். இந்தப் பந்தில் அம்பயர் விக்கெட் தாமதமாகத் தரும்வரை, பெவிலியனில் இருந்து அம்பயரை பார்த்துக்கொண்டே இருந்த டேல் ஸ்டெயின், அம்பயர் அவுட் தந்ததும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது, பார்ப்பதற்கு சுவாரசியமாக இருந்தது!

- Advertisement -