ஐபிஎல்

அனிருத் இசையில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு ஐபிஎல் நிகழ்ச்சியில் நடனமாடிய ரன்வீர் சிங் – வீடியோ இணைப்பு

கொரோனோ பெருந்தொற்றால் கடந்த சில ஆண்டுகள் உலகமே இயல்பு வாழ்க்கையை இழந்து முடங்கியே இருந்தது. அன்றாட இயல்பு வாழ்க்கை தாண்டி மக்கள் ஆசுவாச பெருமூச்சு விடவும் வழி இல்லாமல் கேளிக்கை, விளையாட்டு நிகழ்ச்சிகள் எல்லாமே தடை செய்யப்பட்டிருந்தன.

- Advertisement -

இதனால் உலக கிரிக்கெட்டில் நம்பர் 1 பிரான்ஸிஸைஸ் டி20 தொடரான, இந்திய கிரிக்கெட் போர்ட் நடத்தும் ஐ.பி.எல் தொடரும் தடைபட்டும், தாமதமாகவுமே இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டது. இரண்டு தொடர்களுமே பெரும்பகுதி யு.ஏ.இ-யில் நடத்தப்பட, இந்தியாவில் இரசிகர்களுக்கு மத்தியில் நடத்தப்படும் ஐ.பி.எல் தொடரின் தீவிர சுவாரசியம் குறைந்தே இருந்தது.

இந்த நிலையில் இந்த வருடம் கொரோனோ பெருந்தொற்றின் தாக்கம் பெருமளவில் குறைய, இந்திய கிரிக்கெட் போர்ட் ஐ.பி.எல் தொடரை மும்பை, நவிமும்பை, புனே நகரங்களில் நடத்த திட்டப்பட்டு, மெகா ஏலத்தையும் நடத்தியது.

கடந்த மார்ச் 26ஆம் தேதி ஐ.பி.எல் பதினைந்தாவது சீசன் வெற்றிக்கரமாகத் தொடங்கப்பட்டு, இன்று மே 29ஆம் தேதி குஜராத்தின் அகமதாபாத் நரேந்திர மோதி மைதானத்தில் முடிய இருக்கிறது. சில ஆண்டுகளாக இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு இந்த ஐ.பி.எல் தொடர் ஒரு சிறு ஆசுவாசம் என்று சொன்னால் அது மிகையில்லை.

- Advertisement -

இன்று இறுதிபோட்டி என்பதால் மைதானத்தில் 100% இரசிகர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அத்தோடு வழக்கம்போல் இறுதிபோட்டிக்கான கலைநிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்த கலை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசை நிகழ்ச்சியும், நடிகர் ரன்வீர் சிங்கின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் சில ஹிந்தி பாடல்கல் ஒலிக்க, அடுத்து தமிழ் நடிகர் விஜய் நடித்த, அனிருத் இசை அமைத்த மாஸ்டர் படத்திலிருத்து “வாத்தி கம்மிங் ஒத்தே” பாடல் இசையும் ஒலித்தது. இதற்கு ரன்பீர் சிங் மாஸ்டர் படத்தில் வருகிற நடன அசைவுகளோடே நடினமாடியது சிறப்பாக இருந்தது.

இதற்கடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசை நிகழ்ச்சியில், அவர் ஆஸ்கர் அவார்டு வென்ற ஜெய் ஹோ பாடலோடு கலை நிகழ்ச்சிகள் முடிவடைந்தது. தற்போது டாஸில் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்!