டி20 உலகக் கோப்பை 2024

டி20 உலககோப்பை இந்தியா ஜெயிக்கும்.. ரோகித் டிராவிட்டுக்கு இது தெரியும் – சங்கக்கரா பேச்சு

சில நாட்களுக்கு முன்பு 2024 டி20 உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி வெளியிடப்பட்டது. இந்த டி20 உலகக்கோப்பை அணியில் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் ஜெய்ஸ்வால் சஞ்சு சாம்சன் மற்றும் சாகல் ஆகியோர் இடம் பெற்றன. மேலும் ரிசர்வ் வீரராக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் கான் செல்கிறார். இதுகுறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமை பயிற்சியாளர் குமார் சங்கக்கரா கருத்து தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகச் சிறப்பாக விளையாடி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் மிக வலிமையாக தொடர்ந்து வருகிறது. மேலும் அவர்கள் முதல் அணியாக நடத்து ஐபிஎல் தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டார்கள்.

தற்போது புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து இறுதி போட்டிக்குள் நுழைந்து, கோப்பையை வெல்வது பற்றியான திட்டங்கள்தான் அவர்களிடம் இருக்கும். இந்த நிலையில் அவர்களது அணியில் இருந்து டி20 உலக கோப்பைக்கு இந்திய அணியின் சார்பாக நான்கு வீரர்கள் செல்வது, அவர்களை மேலும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இதுகுறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் குமார் சங்கக்கரா பேசும் பொழுது “நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பையை வெல்லக்கூடிய அணியாக இந்திய அணி இருக்கும். அவர்களிடம் நல்ல பேட்மேன்கள் மற்றும் ஆல் ரவுண்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மிகத் தரமான சுழல் பந்துவீச்சு கூட்டணியை வைத்திருக்கிறார்கள். மேலும் அவர்கள் பிளேயிங் லெவலில் விளையாடக்கூடிய நல்ல காம்பினேஷனை கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா இருவருக்கும் வெஸ்ட் இண்டிஸ் சூழ்நிலைகள் எப்படி ஆனது என்று மிக நன்றாக தெரியும். எனவே அவர்கள் அதற்கு தகுந்தார் போல் ஒரு அணியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்தந்த சூழ்நிலைக்கு ஆழமான பேட்டிங் வரிசை தேவையா அல்லது பலமான பந்துவீச்சு வரிசை தேவையா என்பதை பொறுத்து அவர்களால் குறிப்பிட்ட அணியை ஆட்டத்திற்கு உருவாக்கிக் கொள்ள முடியும்.அவர்கள் சிறந்த நிலையில் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : தோனி இனிமே இப்படி பண்ணாதிங்க.. மிட்சல் சர்வதேச பேட்ஸ்மேன்.. இது டீம் ஸ்போர்ட்ஸ் – இர்பான் பதான் விமர்சனம்

எங்கள் அணியில் இருந்து இந்திய அணியின் சார்பாக நான்கு வீரர்கள் டி20 உலக கோப்பைக்கு செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களின் கடுமையான முயற்சிக்கும் உழைப்புக்கும் கிடைத்தது, எனவே இதற்கான முழு பெருமையும் அவர்களுக்கே சேரும். அறிவிப்பு வரும் வரை அவர்களுடைய மனம் எப்படி இருந்திருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் இதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு அவர்கள் ஒரு மிகச் சிறப்பான ஐபிஎல் தொடரை விளையாடியிருக்கிறார்கள் என்பது முக்கியம்” என்று கூறியிருக்கிறார்.

Published by