டி20 உலகக் கோப்பை 2024

டி20 உலக கோப்பைக்காக.. சிஎஸ்கே ஷிவம் துபேவை தொடர்ந்து இதை செய்ய வைத்தது – இர்பான் பதான் பேட்டி

இந்த ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் துவங்க இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்த அணியில் சிவம் துபே மற்றும் சஞ்சு சாம்சங் சேர்க்கப்பட்டது பலராலும் பாராட்டப்படுகிறது. இதில் சிவம் துபே பற்றி முக்கியமான விஷயம் ஒன்றை இர்பான் பதான் கூறியிருக்கிறார்.

- Advertisement -

பொதுவாக ஆல் ரவுண்டர்கள் எனப்படுபவர்கள் பந்துவீச்சு அல்லது பேட்டிங் ஏதாவது ஒன்றில் சிறப்பாக செயல்பட கூடியவர்களாக இருக்க வேண்டும். இரண்டிலுமே சுமாராக செயல்பட்டால் அவர்களை பயன்படுத்துவதில் எந்த லாபமும் இருக்காது. எனவே ஆல் ரவுண்டர்களை தேர்வு செய்யும் பொழுது இதை வைத்துதான் தேர்வு செய்வார்கள்.

இந்த வகையில் மிதவேக பந்து வைத்து ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே இருவரும் அணியில் இடம் பெற்று இருக்கிறார்கள். இதில் சிவம் துபே பேட்டிங்கில் நன்றாக செயல்படுவார். அடுத்து அவர் பந்துவீச்சில் ஏதாவது ஒன்று இரண்டு ஓவர்களுக்கு கைகொடுத்தால் கூட போதுமானது. ஆனால் அவர் பந்து வீசுவரா? பயிற்சி எடுக்கிறாரா? என்பது குறித்து சந்தேகங்கள் இருக்கிறது.

தற்பொழுது இதுகுறித்து பேசி இருக்கும் இர்பான் பதான் கூறும்பொழுது “சிவம் துபே ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்றால், அவரால் ஒன்று இரண்டு ஓவர்கள் பந்து வீச முடியும். மேலும் சிஎஸ்கே அணியில் தற்போது வலை பயிற்சியில் தொடர்ந்து பந்துவீச்சு பயிற்சி செய்து கொண்டு வருகிறார். ஆனால் அவருக்கு ஐபிஎல் தொடரில் பவுலிங் வாய்ப்பு கிடைக்காதது இம்பேக்ட் பிளேயர் விதியால்தான். ஆனால் நிச்சயம் டி20 உலக கோப்பைக்காக சிஎஸ்கே அணியின் பயிற்சியில் பந்து வீசுகிறார். அதேபோல் நேரம் வரும் பொழுது அவரால் ஒன்று இரண்டு ஓவர்கள் வீச முடியும்.

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரில் நான் அவருடைய அடிக்கும் திறன் எப்படி இருக்கிறது என்பது குறித்துதான் பார்க்க மிகவும் ஆவலாக இருந்தேன். மேலும் ஹைதராபாத் அணிக்கு எதிராக கம்மின்ஸ் அவருக்கு எப்படியான பந்து வீசப் போகிறார்? இவர் அதை எப்படி சந்தித்து விளையாட போகிறார்? என்பது குறித்து எனக்கு எதிர்பார்ப்புகள் இருந்தது.

இதையும் படிங்க: கோலி சூரியகுமார் கிடையாது.. ஹர்திக்தான் உலககோப்பையை நமக்குத் தருவார்.. இதான் காரணம் – கைஃப் பேச்சு

அந்தப் போட்டியில் கம்மின்ஸ் மெதுவான பந்துகளை கொண்டு வருவார் என்று எனக்குத் தெரியும். அந்தப் பந்தை சிவம் துபே சிக்ஸருக்கு அடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி கொடுத்தது. ஆஸ்திரேலியா வீரரின் மனப்பான்மைக்கு எதிராக அவர் வெற்றிகரமாக செயல்பட்டார். எனவே அவரால் நிச்சயம் சிறப்பாக செயல்பட முடியும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Published by