பிஷ்னாய் வீசிய 16வது ஓவரில் 26 ரன்கள் விளாசிய ரஜத் பட்டிதர் ; அடித்த சிக்ஸரால் தூள் தூளான ஃப்ரிட்ஜ் கண்ணாடி – வீடியோ இணைப்பு

0
411
Rajat Patidar

நடப்பு ஐ.பி.எல் தொடரில் சாம்பியன் அணிகளான சென்னை அணியும் மும்பை அணியும் வெளியேறி இருக்க, புதிய அணிகளான குஜராத் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தையும், லக்னோ அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தையும், பெங்களூர் அணி நான்காவது இடத்தையும் பிடித்து இந்த நான்கு அணிகளும் ப்ளேஆப்ஸ் சுற்றில் வாளையாடி வருகின்றன.

முதல் குவாலிபையர் போட்டியில் ராஜஸ்தான் அணியோடு கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதிய குஜராத் அணி வென்று இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இன்று எலிமினேட்டர் சுற்றில் அதே மைதானத்தில் பெங்களூர் அணியும் லக்னோ அணியும் மோதி வருகின்றன.

- Advertisement -

பலத்த காற்றால் தாமதமாகத் தொடங்கிய இந்தப் போட்டியில் முதலில் டாஸ் ஜெயித்துப் பந்துவீச்சை தேர்வு செய்தார் லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல். லக்னோ அணியில் ஜேசன் ஹோல்டர் விளையாடவில்லை அவருக்குப் பதிலாக சமீரா விளையாடுகிறார். பெங்களூர் அணியில் சிராஜ் உள்ளே வந்திருக்கிறார்.

பெங்களூரின் இன்னிங்ஸை பேட்டிங்கில் துவங்க வந்த கேப்டன் பாஃப் தான் சந்திந்த முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி வெளியேறினார். ஆனால் அதற்குப் பின் வந்த ரஜத் பட்டிதார் லக்னோ அணியின் பந்துவீச்சை ஒட்டுமொத்தமாக வைத்துச் சிதைத்து விட்டார் என்றே கூறலாம். ஒருமுனையில் அவருக்கு பொறுமையாக ஒத்துழைப்பு தர ஆரம்பித்தார் விராட் கோலி.

க்ரூணால் பாண்ட்யா வீசிய ஆட்டத்தின் ஆறாவது ஓவரில் முதல் பந்தை விராட் கோலி சிங்கிள் ஆட, ஸ்ட்ரைக்கிற்கு வந்த ரஜத் பட்டிதார் 4, 4, 6, 4, 1 என்று 19 ரன்களை நொறுக்கி பவர்ப்ளேவை பெங்களூர் அணியின் பக்கம் திருப்பினார். இதோபோல் ஆட்டத்தின் இறுதிக்கட்ட ஓவரான 16வது ஓவரை பிஷ்னோய் வீச அந்த ஓவரில் 6, 4, 6, 4, 6 என 26 ரன்களை இந்த ஓவரில் நொறுக்கியதோடு, தனது முதல் சதத்தையும் அடித்தார்!

- Advertisement -