ஷுப்மன் கில்லின் கேட்ச்சைப் பறவைப் போல் பறந்து ஒற்றைக் கையில் பிடித்த ராகுல் திரிப்பாத்தி – வீடியோ இணைப்பு

0
100
Rahul Tripathi One hand Catch

2022 ஐ.பி.எல்-ன் பதினைந்தாவது சீஸனின் 21-வது போட்டி, நவிமும்பையின் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில், கேன் வில்லியம்சனின் ஹைதராபாத் அணியும், ஹர்திக் பாண்ட்யாவின் குஜராத் அணியும் மோதி வருகின்றன!

முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச முடிவு செய்ய, குஜராத் அணிக்குத் துவக்கம் தருவதற்காக,மேத்யூ வேட்டும், சுப்மன் கில்லும் களம் புகுந்தனர்!

முதல் ஓவரை வீச வந்த புவனேஷ்வர் குமார், முதல் பந்திலேயே மேத்யூ வேட்க்கு பவுண்டரி தந்ததோடு, அதற்கடுத்து வைடுகளாய் போட்டதோடு, அதை கீப்பர் பிடிக்க முடியாதளவுக்கு வெளியே வீசி பவுண்டரிகளையும் எக்ஸ்ட்ராவாய் தந்தார். முதல் ஒவரில் பேட்ஸ்மேன்கள் 5 ரன்கள் மட்டுமே அடிக்க, 12 ரன்கள் உதிரியாய் வந்தது!

இந்த நிலையில் அவர் மேல் நம்பிக்கை இழக்காத கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டும் மூன்றாவது ஓவரை புவனேஷ்குமாருக்கு தர, குஜராத்திற்கு கடந்த போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் பேட்டிங் முனையில் இருந்தார்.

புவனேஷ்வர் குமார் அந்த பந்தை, குறைவான இன்-ஸ்விங்காக, புல் லென்த்தில் வீச, பந்து வந்த வேகத்தை விட, இருமடங்கு வேகத்தில், கவர் திசையில் திருப்பி அடித்தார் கில். கண்டிப்பாய் பவுண்டரி என அனைவரும் நினைத்திருக்க, பந்து வந்த அந்த கவர் திசையில் நின்றிருந்த ராகுல் திரிபாதி, அப்படியே காற்றில் பறந்து ஒற்றைக் கையில் அதை கேட்ச்சாக எடுத்து சிலிர்க்க வைத்து விட்டார். இந்த விக்கெட்டை பந்து வீசிய புவியாலே நம்ப முடியாதளவுக்கு, ராகுல் திரிபாதியின் வேகம் இருந்தது!