2 பந்தில் 2 சிக்ஸர் விளாசி மீண்டும் ஓர் முறை பஞ்சாப்பை அடித்து நொறுக்கியுள்ள ராகுல் திவாட்டியா – வீடியோ இணைப்பு

0
216
Rahul Tewetia Gujarat Titans

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் பதினைந்தாவது போட்டி, மும்பையின் ப்ராபோர்ன் மைதானத்தில், ஹர்திக் பாண்ட்யாவின் குஜராத் அணிக்கும், மயங்க் அகர்வாலின் பஞ்சாப் அணிக்கும் இடையே ஹை-ஸ்கோர் மேட்ச்சாக நடந்து முடிந்துள்ளது.

முதலில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வுசெய்ய, பஞ்சாப் அணிக்குத் துவக்கம் தர மயங்க் அகர்வாலும், ஷிகர் தவானும் களமிறங்கினார்கள். இந்த முறையும் மயங்க் ஏமாற்ற, தவான் தாக்குப்பிடித்து நிற்க ஆரம்பித்தார். சென்னையுடன் நொறுக்கிய லியாம் லிவிங்ஸ்டன் 21 பந்துகளில் அரைசதமடிக்க, பஞ்சாப்பின் ஸ்கோர் எகிற துவங்கியது.

- Advertisement -

ஆனால் வழக்கம் போல் நிலைத்து நின்று ஆடாததால் கடைநிலை பேட்ஸ்மேன்களும் ஆட வேண்டிய நிலை வந்து, 200 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டிய பஞ்சாப் 189 ரன்களை மட்டுமே எடுத்து தன் ஆட்டத்தைத் முடித்துக்கொண்டது.

குஜராத் அணிக்காக கில்-வேட் களம் புக, வேட் வழக்கம்போல் சொதப்பி வெளியேறினார். ஆனால் கில் ஒருபுறமாய் நின்று அசத்த, மறுமுனையில் அறிமுக தமிழக வீரரான சாய் சுதர்சன் ஒத்துழைப்பு தர, வெற்றியை நோக்கி முன்னேறியது குஜராத் அணி ஆனால் இங்குதான் ஆட்டத்தில் திருப்புமுனையே உருவானது.

- Advertisement -

திடீரென்று ரன்வேகம் குறைய, சாய் சுதர்சன், சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா வரிசையாய் வெளியேற, கடைசி ஓவருக்கு இருபது ரன்கள் வேண்டிய நிலைக்கு குஜராத் தள்ளப்பட்டது. முதல் நான்கு பந்தில் 8 ரன்கள் வர, கடைசி இரு பந்துகளில் இரு சிக்ஸர்கள் அடித்தால் வெற்றி என்று ஆட்டம் நிற்க, ஸ்ட்ரைக்கில் இருந்த ஐந்து சிக்ஸர்கள் புகழ் திவாட்டியா இருக்க, ஓடியன் தாமஸ் வீச, அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் அதிரடியாய் இரு சிக்ஸர்களை அடித்து முடித்தே விட்டார் திவாட்டியா!

கடைசி இரண்டு பந்தில் இரண்டு சிக்ஸரை இவருக்கு முன் அடித்தது மகேந்திர சிங் தோனி. அவரும் இதே பஞ்சாப் அணிக்கு எதிராகத்தான் அடித்தார். இப்போது திவாட்டியாவும் அதே பஞ்சாப்புக்கு எதிராகவே அடித்திருக்கிறார். இதற்கு திவாட்டியா ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸர்களை அடித்திருந்ததும் பஞ்சாப்புக்கு எதிராகத்தான் என்பது குறிப்பிடத்தக்கது!

எல்லாம் தாண்டி ஆட்டத்தின் கடைசி ஓவரின் நாலாவது பந்தில் தேவையே இல்லாமல் ஓடியன் ஸ்மித் ரன்அவுட் செய்யபோக, ஒரு ரன் ஓவர் த்ரோவில் வந்தது. இந்த ஒரு ரன்தான் இரண்டு பந்துக்கு இரண்டு சிக்ஸர்கள் அடித்தால் வெற்றி என்று ஆட்டத்தை மாற்றிவிட்டது!

- Advertisement -