டேபிள் டாப்பர் குஜராத் டைட்டன்ஸ் அணி அவர்களது 10வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார் கேப்டன் ஹர்திக் பாண்டியா. தொடக்க வீரர்கள் சாஹா 21 மற்றும் கில் 9 ரன்களில் வெளியேறினர். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் 7 பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தது. அடுத்து தமிழக வீரர் சாய் சுதர்ஷனுடன் டேவிட் மில்லர் கைகோர்த்தார்.
சரிவில் இருந்த அணியை இருவரும் மீட்க முயன்றனர். ஆனால் அவர்களது போராட்டம் வெறும் 5 ஓவர்கள் மட்டுமே நிலைத்தது. மில்லர் 11 ரன்களில் வெளியேற அதிரடி பினிஷர் ராகுல் திவாட்டியா களத்தில் இறங்கினார். குஜராத் அணி வெற்றி பெற்ற 8 போட்டிகளில் 4 வெற்றிகளுக்கு பெறும் பங்காற்றியுள்ளார். எப்போதும் பொறுமையாக இருக்கும் திவாட்டியா போட்டியை எடுத்துச் செல்லும் எண்ணம் கொண்டவர்.
ஆனால் இம்முறை தன் பொறுமையை இழந்து சக வீரரிடம் கோபத்தை வெளிக்காட்டினார். 12வது ஓவரில் திவாட்டியா சிங்கிள் எடுக்க அழைத்து விட்டு பாதி தூரம் ஓடிவிட்டார். எதிரில் இருந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் தகுந்த பதில் அளிக்காமல் அதே இடத்தில் நின்றார். இதனால் கோபம் அடைந்த திவாட்டியா, அவரைப் முறைத்துப் பார்த்தார்.
Tewatia angry! pic.twitter.com/7okGTIC0S8
— Cricketupdates (@Cricupdates2022) May 3, 2022
குஜராத் அணிக்காக சாய் சுதர்சன் மட்டுமே நிலைத்து நின்று 65 ரன்கள் அடித்தார். தன் முதல் ஐபிஎல் அரை சதத்தையும் பதிவு செய்து அசத்தினார். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். 20 ஓவர் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழந்து 143 ரன்கள் சேர்த்து. பஞ்சாப் அணிக்காக 4 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி குஜராத் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த உதவினார் காசிகோ ரபாடா.