பயிற்சியில் புஜாரா மற்றும் ரஹானேவை ஸ்விங் மூலம் திணறடித்த இந்திய பந்துவீச்சாளர் – வீடியோ இணைப்பு

0
2089
Deepak Chahar Swinging Red Ball to Rahane and Pujara

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட காத்திருக்கிறது. வரும் 26 ஆம் தேதி இந்த டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. இதுவரை தென் ஆப்பிரிக்க மைதானங்களில் வெறும் 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இந்திய அணி வென்று உள்ளது. அதுவும் போக ஒருமுறைகூட தொடரை கைப்பற்றியதே கிடையாது. கடந்த முறை இங்கு விளையாடும் போதும் 2-1 என்று டெஸ்ட் தொடரில் தோல்வி பெற்றது இந்திய அணி. ஆனால் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி பலருக்கும் இந்திய பந்துவீச்சாளர்கள் அந்த தொடரில் ஆச்சரியத்தை கொடுத்தனர். இந்தத் தொடரிலும் அதுபோல சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களுடன் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை எதிர்கொள்ள இந்திய அணி காத்திருக்கிறது.

டெஸ்ட் அணியில் இடம் பெறாவிட்டாலும் நான்கு வீரர்களை இந்திய அணி பயிற்சிக்காக தென் ஆப்பிரிக்காவிலேயே தங்க வைத்துள்ளது. அதில் முக்கியமானவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரும் இந்திய அணியின் ஸ்விங் பந்துவீச்சாளர் மான தீபக் சஹர். டி20 போட்டிகளில் இவர் வீசும் பவர் பிளே ஓவர்களில் ரன்கள் எடுப்பது மிகவும் கடினம். வந்து எந்த பக்கம் செல்லும் என்று பேட்டிங் வீரர்கள் கணிப்பதற்கு முன்பே ஆட்டமிழக்க வைத்துவிடுவார். இதன் காரணமாக இவரின் ஸ்விங் பந்து வீச்சு அணியினர் பயிற்சி பெறுவதற்கு மிகவும் வசதியாக இருக்கும் என்று இந்திய அணியில் தங்க வைக்கப்பட்டார்.

- Advertisement -

தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய அணியினர் தீபக் சஹர் பந்துவீச்சை எதிர்கொண்டு பயிற்சி எடுத்து வருகின்றனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ள தீபக் சஹர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் சிவப்பு பந்தில் பந்து வீசுவது மிகவும் அருமையாக உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார். அந்த வீடியோவில் சஹர் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணியின் முக்கிய வீரர்களான புஜாரா மற்றும் ரகானே திணறி ஆடுவதைப் பார்க்க முடிகிறது.

ஏற்கனவே மோசமான ஆட்டம் காரணமாக தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வரும் புஜாரா மற்றும் ரஹானே தற்போது மீண்டும் இப்படி திணறி வருவது இந்திய ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.