வீடியோ: இறங்கி விளாச பார்த்த ஷுப்மன் கில்.. பந்தை மரண டர்ன் விக்கெட் எடுத்து நக்கலாய் சிரித்த நேதன் லயன்!

0
304

நேத்தன் லயன் பந்தை இறங்கி அடிக்க முயற்சித்து அவுட் ஆகினார் ஷுப்மன் கில். இதன் வீடியோ கீழே உள்ளது.

இந்தூரில் நடைபெற்று வரும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்தது இந்திய அணி. முதல் இன்னிங்சில் 09 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி, சுதாரித்துக் கொண்டு இந்திய அணியினரின் சுழல்பந்துவீச்சை நேர்த்தியாக கையாண்டு ரன்களை அடித்தனர். இதனால் முதல்நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி வெறும் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 156 ரன்களை அடித்திருந்தது. கேமரூன் கிரீன் மற்றும் ஹென்ஸ்க்கோம் இருவரும் களத்தில் நின்றனர்.

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கம் நன்றாக அமைந்தாலும், ட்ரிங்க்ஸ் இடைவேளை முடிந்து வந்த பிறகு, அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் இரண்டு பேரும் மளமளவென விக்கெட்டுகளை கைப்பற்றினர். வெறும் 11 ரன்கள் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்

இரண்டாம் நாளில் மொத்தம் 41 ரன்கள் அடித்து ஆறு விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 197 ரன்கள் ஆல் அவுட் ஆனது. 88 ரன்கள் முன்னிலையும் பெற்றிருந்தது.

- Advertisement -

பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக ஷுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். மைதானத்தில் நிதானமாக விளையாடினால் சுழல்பந்து வீச்சாளர்கள் எளிதாக விக்கெட்டுகளை எடுத்து விடுவார்கள் என்பதால் சற்று அதிரடியான முனைப்புடன் ஆடிய கில், நேதன் லயன் பந்தை இறங்கி அடிக்க முயற்சித்தபோது, லயன் பந்தை நன்றாக டர்ன் செய்து போல்ட் ஆக்கினார்.

விரக்தியுடன் ஐந்து ரன்கள் மட்டுமே அடித்து கில் வெளியேறினார். நேதன் லயன் ஷுப்மன் கில்லை போல்டாக்கிய வீடியோ:

அதன்பிறகு கேப்டன் ரோகித் சர்மா 12 ரன்கள், விராட் கோலி 13 ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். 59 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது. தற்போது களத்தில் ஜடேஜா மற்றும் புஜரா இருவரும் இருக்கின்றனர்.