முதல் பந்திலேயே ஸ்டொம்புகள் சிதறல் ; ருத்துராஜ் கெய்க்வாட் விக்கெட்டை வீழ்த்திய தமிழக வீரர் நட்ராஜன் – வீடியோ இணைப்பு

0
781
Thangarasu Natarajan and Ruturaj Gaikwad

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசன் ஆரம்பித்து, பெரிய அணிகள் தொடர்ச்சியாக அடிவாங்க ஆரம்பித்து, தற்போது தொடர் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பாயிண்ட்ஸ் டேபிளை தலைகீழாகப் பார்த்தால்தான் ஐ.பி,எல் தொடரின் ராஜாக்கள் மேலே இருப்பார்கள்!

ஐந்து முறை ஐ.பி,எல் கோப்பையை வென்ற மும்பை இன்டியன்ஸ் அணியும், நான்கு முறை ஐ.பி.எல் கோப்பையை வென்ற சென்னை அணியும், தற்போது முதல் மூன்று ஆட்டங்களைத் தோற்று, முதல் வெற்றிக்காகப் போராடி வருகின்றன!

- Advertisement -

இன்றைய டபுள் ஹெட்டர் ஆட்டத்தில், இரவு பெங்களூரைச் சந்திக்கிறது மும்பை. இன்னொரு ஆட்டத்தில் தற்போது ஹைதராபாத்தை எதிர்த்து டாஸை தோற்று விளையாடி வருகிறது சென்னை. இந்த நாள் ஐ.பி.எல் தொடர் ராஜாக்களான இரு அணிகளுக்குமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது!

இது ஒருபுறம் என்றால், இந்த ஐ.பி.எல் தொடர் நமது தமிழக வீரர்களுக்கு மிகச் சிறப்பான தொடர் என்றே கூறலாம். பெங்களூர் அணிக்கு தினேஷ் கார்த்திக்கும், ஹைதராபாத்திற்கு வாஷிங்டன் சுந்தரும், நேற்று குஜராத்துக்காக அறிமுகமான சாய் சுதர்சனும் மிகச்சிறப்பாக ஆடிவருகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இன்றைய சென்னை அணியின் முக்கிய ஆட்டத்தில், ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் யார்க்கர் கிங் தமிழகத்தின் நடராஜன், ஆட்டத்தில் தான் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே, சென்னை அணியின் நட்சத்திர இளம் வீரர் ருதுராஜை ஸ்டம்புகள் சிதற க்ளீன்-பவுல்ட் செய்து வழியனுப்பி வைத்தார்!

தமிழக வீரர் சென்னை அணிக்கு செக் வைக்கும் சுவாரசியமான சம்பவங்கள் எல்லாம் ஐ.பி.எல்-ல்தான் சாத்தியம்!

- Advertisement -