முத்தையா முரளிதரனை கோபத்தில் கத்த விட்ட யான்சென் – வீடியோ இணைப்பு

0
310
Muttiah Muralitharan

நேற்று ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 40வது ஆட்டமாக, ஹைதராபாத் அணிக்கும், குஜராத் அணிக்கும், மும்பை வான்கடேவுல நடந்த ஆட்டம், கிரிக்கெட் இரசிகர்களுக்கு நல்ல விருந்தாகவும், ஆடிய வீரர்களுக்கும், அணி ஊழியர்களுக்கும் டென்சனான ஒரு ஆட்டமாகவும் அமைந்திருந்தது.

டாஸை இழந்து முதல்ல பேட் பண்ண வந்த ஹைதராபாத், அபிஷேக் சர்மா, எய்டன் மார்க்ரம்மின் அரைசதங்களோடும், இறுதிநேரத்தில் ஷாசாங்க் சிங் ஆறே பந்துல அடிச்ச 25 ரன்கள் உதவியோடும், குஜராத் அணிக்கு சவாலான இலக்கைத் தர 195 ரன்கள குவித்தது. ரசீத்கான் ஆச்சரியமாக நான்கு ஓவர்களுக்கு 45 ரன்களை விட்டு தந்தார்.

அடுத்து 196 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய குஜராத்துக்கு பவர்ப்ளேவில் 59 ரன்களை கில்-சகா ஜோடி கொண்டுவந்தது. ஆனால் ஏழாவது ஓவரில் பவுலிங்கில் களமிறங்கி, ஆட்டத்தின் 16வது ஓவர்வரை பந்துவீசி மொத்தம் 5 விக்கெட்டுகளை நான்கு ஓவர்கள் பந்துவீசி, 25 ரன்கள் விட்டுக்கொடுத்து கைப்பற்றி அசத்தினார் உம்ரான் மாலிக்.

ஆனால் அதுவரையில் ஹைதராபாத் கையிலிருந்த ஆட்டத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக திவாட்டியா-ரஷீத் ஜோடி பறித்து, கடைசி ஓவருக்கு 22 ரன்கள் என்ற நிலைக்கு ஆட்டத்தை எடுத்து வந்தது. இந்த நிலையில் யான்சென் இறுதி ஓவரை வீச, முதல் பந்தை சிக்ஸர் அடித்த திவாட்டியா, அடுத்த பந்தில் ஒரு ரன் எடுக்க, ஸ்ரைக்கிற்கு வந்த ரசீத்கான் சென்னையைப் புரட்டியதுபோலவே, சிக்ஸ், டாட், சிக்ஸ், சிக்ஸ் என நொறுக்கி குஜராத்தை வெற்றி பெற வைத்தார். இந்த ஓவரில் யான்சென் தொடர்ந்து புல்லாக பந்தை வீசி சிக்ஸர் தர, பெவிலியனின் இருந்த முரளிதரன் கோபம் தாங்காமல் கத்தியேவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது!