மீண்டும் பொலார்டை திட்டமிட்டு தூக்கிய தல தோனி – வீடியோ இணைப்பு

0
2351
Dhoni field placement to dismiss Pollard

2022 ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 32வது போட்டி, நவிமும்பையின் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில், ஐ.பி.எல் ஆண்டைகளான சென்னை அணியும், மும்பை அணியும் தற்போது மோதி வருகின்றன.

சென்னை அணி ஆறில் ஐந்து ஆட்டங்களைத் தோற்றிருக்க, மும்பையோ ஆடிய ஆறு ஆட்டங்களையும் தோற்று பரிதாபமாக இருக்கிறது. மும்பை அணி முதல் வெற்றிக்காக மூன்று மாற்றங்களைச் செய்திருக்க, சென்னை அணி இரண்டு மாற்றங்களைச் செய்திருந்தது.

டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா பவுலிங்கை தேர்வு செய்ய, மும்பையின் ஓபனிங் ஜோடியான ரோகித்-இஷானை முகேஷ் ரன் எடுக்கவிடாமல் வெளியேற்றினார். அடுத்து வந்த யாரும் நிலைக்காத பொழுது திலக் வர்மா மட்டுமே அரைசதமடிக்க, முடிவில் மும்பை அணி 155 ரன்களை எடுத்திருக்கிறது.

இதில் சுவாரசியமான விசயம் என்னவென்றால் பொலார்டு விக்கெட்தான். தல தோனி 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் லாங்-ஆப்பை நேராக நிற்க வைத்து தீக்சனா ஓவரில் பொலார்டை தூக்கினார். தோனியின் இரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இதை கொண்டாடி வருகின்றனர்!