ஐபிஎல் வரலாற்றின் அதிவேகப் பந்தை வீசிய லாக்கி பெர்குசன் ; அதிர்ச்சியடைந்த கீப்பர் சாஹா – வீடியோ இணைப்பு

0
953
Lockie Ferguon fastest delivery of IPL 2022

கிரிக்கெட் உலகமே எதிற்பாதுக் காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் இறுதிப் போட்டி கோலாகலமாக இன்று மாலை தொடங்கியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஷ்வால் ஆரம்பம் முதலே தடுமாறிக் காணப்பட்டார். இருப்பினும் 1 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் சேர்த்து 16 பந்தில் 22 ரன்கள் அடித்தப் பின்னர் விக்கெட்டை பறிகொடுத்தார். குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சாளர்கள் தங்களது முழு சக்தியையும் கொடுத்து பந்து வீசினார்கள்.

முக்கியமாக வேகத்திற்கு பெயர் போன லாக்கி பெர்குசன் இம்முறை கூடுதல் ஈடுபாட்டுடன் பந்து வீசினார். பங்கேற்கும் அனைத்து போட்டிகளிலும் சராசரியாக 150 முதல் 154 கி.மீ வேகத்தில் பவுலிங் செய்து எதிரணி வீரர்களை தடுமாறச் செய்வார். இன்று இறுதிப் போட்டியில் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து 2022 ஐபிஎல் தொடரின் வேகமான பந்தை வீசியிருக்கிறார்‌ பெர்குசன்.

- Advertisement -

5வது ஓவரின் கடைசி பந்தில் 157.3 கி.மீ வேகத்தில் பெர்குசன் வீசிய யார்க்கர் பந்தை ஜாஸ் பட்லரால் தொடக் கூட இயலவில்லை. இதன் மூலம் இந்த ஆண்டு 157 கி.மீ வேகம் வீசிய உம்ரான் மாலிக்கின் சாதனையை முறியடித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிவேகப் பந்து வீசிய ஷான் டெயிட் சாதனையையும் சமன் செய்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிவேகப் பந்து வீசியவர்கள் :

ஷான் டெயிட் – 157.3 கி.மீ
லாக்கி பெர்குசன் – 157.3 கி.மீ
உம்ரான் மாலிக் – 157 கி.மீ