கே எல் ராகுலுக்காக க்ருணல் பாண்டியா செய்த செயல் – இணைய வாசகர்கள் நெகிழ்ச்சி

0
319
KL Rahul and Rohit Sharma

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இரண்டு அணிகளுமே அடுத்த சுற்றுக்கு செல்வதற்கு கடினமாக போராடி வருகின்றது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 5வது இடத்துக்கு முன்னேறலாம் என்ற கணக்கோடு இரண்டு அணிகளுமே ஆட்டத்தை ஆரம்பித்தனர். டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணிக்கு ராகுல் மற்றும் மந்தீப் சிங் துவக்கம் கொடுத்தனர்.

ஆட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே ராகுல் வழக்கம்போல பெரிய ஸ்கோருக்கு அடித்தளம் அமைக்க ஆரம்பித்தார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் முக்கிய நிகழ்வு இவர் அடித்த ரன்கள் கிடையாது. இணைய வாசிகளால் பெரிதும் விமர்சிக்கப்படும் க்ருணல் பாண்டியா செய்த செயல்தான் நேற்று முழுவதும் இணையத்தில் வைரல். இருவருக்குமே முக்கியமான ஆட்டம் என்பதால் எதிரணியின் மிகச் சிறந்த பேட்டிங் வீரரை அப்போது நான் இரண்டு அணிகளும் தீவிரமாக இருக்கும். ஆனால் நேற்று இரவு ராகுலை அவுட் ஆக்க கிடைத்த வாய்ப்பை பாண்டியா செய்ய மறுத்துவிட்டார். இதனால்தான் பாண்டியாவை இணையத்தில் நேற்று முழுவதும் பலரும் பாராட்டி வந்தனர்.

ஆட்டத்தின் 6-வது ஓவரில் கெயில் அடித்த பந்து நேராக பாண்டியாவிடம் வந்தது. அப்போது கேஎல் ராகுல் குறுக்கே வந்து விட வந்து அவரைத் தாக்கி சென்றது. இதனை அறியாது பாண்டியா பந்தை எடுத்து ராகுலை ரன் அவுட் செய்து அம்ப்பயரிடம் அவுட் கேட்டார். அப்போது ராகுல் கிரீசுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். நாள் வந்து ராகுலின் மேல் தாக்கியதன் காரணமாகத்தான் அவர் கிரீசை விட்டு வெளியே சென்றார் என்பதை உணர்ந்த பாண்டியா உடனே அம்ப்பயரிடம் அவுட் கேட்டதை வாபஸ் வாங்கிகொண்டார். மும்பை அணியின் கேப்டன் ரோகித்தும் இதற்கு அப்பீல் செய்ய வேண்டாம் என்று கூறினார்.

அந்த ஓவர் முடிந்த பிறகு ராகுல் மற்றும் ரோஹித் என இருவரும் தம்ஸ் அப் மூலம் தங்களின் நட்பை வெளிக்காட்டிக் கொண்டனர். என்னதான் ராகுலுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்தாலும் அதை அவர் சரியாக பயன்படுத்தாமல் இருப்பது ஒரு பந்துகளை பிடித்து 20 ரன்கள் அடித்து மட்டுமே வெளியேறினார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட மும்பை அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.