மீண்டும் மீண்டும் சதம் விளாசி அதிரடி காட்டும் ஜோஸ் பட்லர் – விராட் கோலியின் 973 சாதனையை முறியடிக்க பிரகாச வாய்ப்பு

0
126
Jos Buttler Century vs DC

ஐ.பி.எல் பதினைந்தாவது சீஸனில் இந்திய நட்சத்திர வீரர்களான விராட்கோலி, ரோகித் ஷர்மா, ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஷ் ஐயர், வெங்கடேஷ் போன்றவர்கள் ரன் எடுக்க கஷ்டப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக விராட்கோலி, ரோகித் ஷர்மாவின் பேட்டிங் இந்தத் தொடரில் இதுவரை எடுபடவில்லை. அதேசமயத்தில் இந்திய இளம் வீரர்கள் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

இந்த ஐ.பி.எல் தொடரில் வெளிநாடுகளைப் பொறுத்தவரை இங்கிலாந்தின் நட்சத்திர வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், சாம் கரன், ஜேசன் ராய் போன்றவர்கள் பங்குபெறவில்லை. ஜோஸ் பட்லர், பேர்ஸ்டோ இரண்டு நட்சத்திர வீரர்கள்தான் இங்கிலாந்தின் சார்பில் இந்த ஐ.பி.எல் தொடரில் இருக்கிறார்கள்.

- Advertisement -

இதில் பேர்ஸ்டோ ஆட்டம் சொதப்பலாகவே இருக்க, ஜோஸ் பட்லரின் பேட்டிங்கோ நெருப்பு மாதிரி இருக்கிறது. இதுவரை இரண்டு சதங்களை அடித்து நொறுக்கி இருந்தவர். தற்போது டெல்லி அணிக்கு எதிராக மும்பையின் வான்கடேவில் நடந்து வரும் ஆட்டத்தில் மூன்றாவது சதத்தையும் அடித்து அசத்தியிருக்கிறார்.

ஒரு ஐ.பி.எல் தொடரில் 973 என அதிக ரன்களை குவித்ததும், ஒரு தொடரில் அதிக சதங்களாக நான்கு சதங்களை அடித்திருப்பது விராட்கோலிதான். இதை இந்த முறை முறியடிக்க நல்ல வாய்ப்பு ஜோஸ் பட்லருக்கு கிடைத்திருக்கிறது. அதேபோல் தவானுக்குப் பிறகு அடுத்தடுத்து இரண்டு சதங்களை அடித்தவர் என்ற சாதனையையும் ஜோஸ் பட்லர் படைத்திருக்கிறார்!