எளிய கேட்சுகளை எல்லாம் விட்டுவிட்டு கடினமான கேட்சை பிடிக்கும் ஜோஸ் பட்லர் – அனைத்து வீடியோக்களும் இணைப்பு

0
988
Jos Butler

இங்கிலாந்து அணி தற்போது ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தொடரில் 5 டெஸ்ட் போட்டிகள் உள்ளன. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடப்படும் ஆஷஸ் தொடரில் சிறப்பாக செயல்படுவதால் ஒவ்வொரு வீரருக்கும் பெருமையாக கருதப்படும். கடந்த இரண்டு தொடர்களாக ஆஷஸ் கோப்பையை வெல்ல முடியாமல் பரிதவிக்கும் இங்கிலாந்து அணி இந்த முறையாவது அதை வென்று விட வேண்டும் என்ற முனைப்புடன் ஆஸ்திரேலியாவில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பன் மைதானத்தில் நடந்தது. பொதுவாக ஸ்பெண்ட் மைதானத்தில் நடக்கும் அத்தனை போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி எளிதில் வெற்றி பெறும். அதேபோல இங்கு தான் ஆஷஸ் தொடரின் முதல் போட்டியிலும் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா. முதல் போட்டியில் நிகழ்ந்தாலும் அடுத்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று அடிலெய்ட் மைதானத்தில் நடந்து வரும் போட்டியில் இங்கிலாந்து விளையாடி வருகிறது.

இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதிகமாக பேசப்படும் விஷயமாக இருப்பது இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர் தான். முதல் இன்னிங்சின் போதும் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் மார்க்கஸ் ஹாரிஸின் விக்கெட்டை அற்புதமாக பாய்ந்து பிடித்தார். ஆனால் அதன் பின்பு மார்னஸ் லபுஷேன் கொடுத்த இரண்டு எளிய கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டார். இதற்காகவே அவர் மீது மிகவும் கடினமான விமர்சனங்கள் எழுந்தன. பேட்டிங்கிலும் பெரிதாக பங்களிக்க தவறுகிறார் என்றும் கேட்ச் வாய்ப்புகளை பிடிக்கவும் தவறுகிறார் என்றும் ரசிகர்கள் அவரை விமர்சித்தனர்.

- Advertisement -

இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் கொடுத்த கேட்ச் வாய்ப்பை அற்புதமாக தன்னுடைய இடது பக்கம் தாவி சென்று பிடித்தார் பட்லர். மிகவும் கடினமான கேட்ச் வாய்ப்பாக அது இருந்தபோதும் அதை எளிதாக பிடித்தார். தற்போது அந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் ஜாஸ் பட்லர் எளிய கேட்ச் வாய்ப்புகளை எல்லாம் தவற விடுவதாகவும் கடினமான கேட்சுகளை எல்லாம் மிகவும் சுலபமாக பிடிக்கிறார் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்