இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட்டில் பறவையைப் போல பறந்து கேட்ச் பிடித்த ஜாஸ் பட்லர் – வீடியோ இணைப்பு

0
197
Jos Butler Stunning Catch in 2nd Ashes Test

ஆஸ்திரேலிய அணி தற்போது வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தற்போது 2-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்து வரும் இந்தப் போட்டியில் முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. முதல் போட்டி பிரிஸ்பன் மைதானத்தில் நடந்தது. ஆஸ்திரேலிய அணி அதில் எளிதாக 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரில் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்றால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணியை இங்கிலாந்து எதிர்கொள்ள 2வது டெஸ்ட் போட்டியில் களம் இறங்கியுள்ளது.

ஆஷஸ் தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட கம்மின்ஸ் கொரோனா அச்சம் காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வில்லை. அதன் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மறுபடியும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ஹேசல்வுட் காயம் காரணமாக இந்த டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய நிலையில் தற்போது இன்னும் ஒரு சீனியர் பந்து வீச்சாளரும் விலகியுள்ளார். இதனால் நெசர் மற்றும் ரிச்சர்ட்சன் என இரண்டு வீரர்களுக்கு ஆஸ்திரேலிய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் மற்றும் ஹாரிஸ் இணைந்து துவக்கம் கொடுத்தனர். கடந்த பல ஆண்டுகளாகவே வார்னருக்கு சரியான பார்ட்னர் கிடைக்காமல் ஆஸ்திரேலிய அணி அவதிப்பட்டு வருகிறது. பேங்க்ராஃப்ட், ஃபிஞ்ச், ஜோ பர்ன்ஸ் என்று பல வீரர்களை முயற்சி செய்து பார்த்து வந்தது. எதுவும் கை கொடுக்காததால் மீண்டும் மார்க்கஸ் ஹாரிரிசை துவக்க வீரராக ஆட ஆஷஸ் தொடருக்கு ஆஸ்திரேலிய நிர்வாகம் அழைத்தது. ஆனால் அவர் முதல் டெஸ்டில் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி அணியில் தனக்கென ஒரு நிரந்தர இடம் பிடிப்பார் என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் இந்த முறையும் மூன்று ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ஹாரிஸ். ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்தில் புல் ஷாட் அடிக்க முயன்ற போது பந்து நேராக ஜாஸ் பட்லரின் வலதுபுறம் சென்றது. அதை பறவை போல பாய்ந்து தன்னுடைய வலது கையால் தாஸ் பட்லர் பிடிக்க பரிதாபமாக வெளியேறினார் ஹாரிஸ்.

பட்லர் பிடித்த இந்த கேட்சின் வீடியோவை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.