அடிப்பட்ட இடத்திலேயே மீண்டும் அடிவாங்கிய ஜோ ரூட் ; 4வது நாளின் கடைசி பந்தில் விக்கெட்டையும் இழந்த பரிதாபம் – வீடியோ இணைப்பு

0
304
Jos Butler and Mitcell Starc

இங்கிலாந்து அணி தற்போது வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடரை ஆடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இங்கிலாந்து விளையாடி வருகிறது. தொடரின் முதல் போட்டி ஆஸ்திரேலிய அணியின் கோட்டையாக கருதப்படும் பிரிஸ்பன் மைதானத்தில் நடந்தது. எளிதாக அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே கடந்த இரண்டு ஆசஸ் தொடர்களிலும் ஆஸ்திரேலிய அணி தான் வென்று இருந்தது. இங்கிலாந்தில் மானப் பிரச்சனையாக கருதப்படும் ஆஷஸ் தொடரை வென்றாக வேண்டிய முனைப்பில் தற்போது இங்கிலாந்து அணி 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் குரோனா அச்சம் காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வில்லை. அவருக்கு பதிலாக முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுகிறார்.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் லபுஷேன் இணைந்து சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 473 ரன்கள் குவித்தது. அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து அணியால் 236 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக அந்த அணியில் மாறன் மற்றும் கேப்டன் ரூட் இருவரும் அரைசதம் கடந்தனர். ஆஸ்திரேலிய அணிக்கு இரண்டாவது இன்னிங்சிலும் லபுஷேன் அரைசதம் கடந்து அசத்தினார். அவர்கூட மற்றொரு வீரரான ஹெட்டும் அரை சதம் அடிக்க 468 ரன்களை இங்கிலாந்து அணிக்கு இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்தது.

- Advertisement -

இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இந்த அணிக்கு துவக்க வீரர் ஹமீத் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். மாறன் 20 ரன்கள் எடுத்து வெளியேறி மீண்டும் களத்துக்கு வந்தார் கேப்டன் ஜோ ரூட். ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க சற்று தடுமாறிய ரூட் இரண்டு முறை இடுப்புப் பகுதிக்குக் கீழே பந்தைக் கொண்டு தாக்கப்பட்டார்.

இரண்டு முறையும் வலியால் துடித்த அவர் அணியை பாதையில் கைவிடாமல் தொடர்ந்து விளையாட முயன்றார். இருந்தாலும் ஆஸ்திரேலிய அணியஅணியின் மிட்செல் ஸ்டார்க் வீசிய நாளின் கடைசி ஓவரில் ரூட் ஆட்டமிழந்தார். தற்போது ஸ்டோக்ஸ் 3 ரன்களுடன் களத்தில் உள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு மூன்றாம் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் செய்தது போல அதிசயம் எதையாவது ஸ்டோக்ஸ் நிகழ்த்துவாரா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.