தல தோனி என்னுடன் இருக்கும் வரை நான் பயப்படத் தேவையில்லை ; கேப்டனாக பொறுப்பேற்றப் பின் ஜடேஜா பேசியது – வீடியோ இணைப்பு

0
147
Ravindra Jadeja and MS Dhoni

ஐ.பி.எல் 15-வது சீசனின், சி.எஸ்.கே அணி விளையாடும் முதல் போட்டிக்கு இரண்டு நாட்களே இருக்கிறது.

இந்த நிலையில் சி.எஸ்.கே அணியின் கேப்டனும், ஐ.பி.எல் தொடரில் வெற்றிக்கரமான கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியிருப்பது, சி.எஸ்.கே இரசிகர்கள் வட்டாரத்தில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஐ.பி.எல் இரசிகர்கள் வட்டாரத்திலும் பேசுப்பொருளாய் மாறியிருக்கிறது!

- Advertisement -

2020 ஐ.பி.எல் சீசன் சி.எஸ்.கே-க்கு மோசமாக அமையாமல் இருந்திருந்தால் 2021 ஐ.பி.எல் சீசனிலேயே ஜடேஜாவை கேப்டனாய் நியமித்து, கேப்டன்சி அனுபவங்களை தோனி ஆடும் காலத்திலேயே அவருக்கு உருவாக்குவதாக இருந்தது!

ஆனால் 2020 ஐ.பி.எல் சீசனில் மோசமான தோல்வியைச் சந்தித்ததால், அணியைக் கொஞ்சம் மீட்டெடுத்து, புது தலைமையிடம் ஒப்படைப்பதற்காகவே தோனி கேப்டனாக தொடர்ந்தார்.

2021 ஐ.பி.எல் சீசனில் ருது-பாப் உடைய சிறப்பான பார்ம், அணியாய் சி.எஸ்.கே-வை மீண்டெழ வைத்ததோடு, கோப்பையை உயர்த்தவும் வைத்தது!

- Advertisement -

அணி மீண்டும் பழைய வெற்றி பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டதால், பழைய திட்டபடியே, தற்போது ஜடேஜாவிடம் கேப்டன் பொறுப்பளிக்கப்பட்டு இருக்கிறது. தோனி ஆடும் காலத்தில் புது கேப்டன் என்பது சி.எஸ்.கே அணியின் எதிர்காலத்திற்கான தொலைநோக்கு திட்டம்!

இது தோனியின் முழு சம்மதத்துடன் எடுக்கப்பட்ட முடிவு. இன்னும் சொல்லப் போனால், இது தோனியின் முடிவு. தோனிக்கு எப்படி விடைபெற வேண்டுமென்று தெரியும்!

புதிதாய் கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கும் ஜடேஜாவிடம் இதுக்குறித்து கேட்ட பொழுது “நல்லவிதமாய் உணருகிறேன். அதேசமயத்தில் மிகப்பெரிய வீரர் ஒருவரின் இடத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறேன். அவர் (தோனி) கேப்டன்சியில் ஒரு மரபை உருவாக்கி வைத்திருப்பவர். அதை மேலும் முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் இதுக்குறித்து நான் அதிகம் கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால் அவர் என் பக்கத்தில்தான் இருக்கிறார். எந்தச் சந்தேகம் என்றாலும் நான் உடனே அவரிடம் கேட்டுக்கொள்வேன். அவரின் சக்தியும் அவரும் என்னோடு இருக்கிறார்கள். உங்களின் தொடர்ந்த ஆதரவிற்கு நன்றி” என்றார்.

அவர் ஆடும் வரை எப்போதும் அவர்தான் கேப்டன்தான்!