அவுட் ஆனப் பின் தன் மேலேயே காண்டான ஹர்திக் பாண்டியா ; பெவிலியன் சென்றப் பின்பும் சீருடையை கழுட்டவில்லை – வீடியோ இணைப்பு

0
406
Hardik Pandya GT

குஜராத் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலாக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் குவித்தது. நேற்றைய ஆட்டத்தில் சுப்மன் கில் அதிகபட்சமாக 63* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர் விளையாடிய இலங்கை அணி 82 ரன்களில் ஆட்டமிழக்க 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி அடைந்தது. குஜராத் அணையில் சிறப்பாக பந்துவீசியரஷித் கான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -
விரக்தியடைந்த ஹர்திக் பாண்டியா

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை தலைமை தாங்கிய விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா 11 போட்டிகளில் விளையாடி இதுவரை 344 ரன்கள் குவித்திருக்கிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 38.22 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 131.8 ஆக உள்ளது.

ஆரம்பத்தில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வந்த ஹர்திக் பாண்டியா தற்போது ஒரு சில போட்டிகளில் குறைந்த ரன்களை குவித்து வருகிறார். நேற்றைய போட்டியிலும் 13 பந்துகளில் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

ஆவேஷ் கான் வீசிய பந்தில் ரன் எடுக்க முயற்சி செய்த பொழுது பேட்டில் எட்ஜாகி அவர் துரதிஷ்டவசமாக அவுட்டானார். தான் அவுட் ஆனதை நம்பமுடியாத ஹர்திக் பாண்டியா பெவிலியனக்கு திரும்பாமல் களத்திலேயே சிறிது நேரம் திகைத்து போய் நின்றார். மேலும் அவர் சற்று கோபமாகவும் காணப்பட்டார்.

- Advertisement -

தன்னுடைய கிரிக்கெட் கிட்டை அகற்றாமல் தலையை கீழே தொங்க போட்டவாறு சோகமாக, பின்னர் அவர் பெவிலியன் நோக்கி நடந்து சென்றார். களத்தில் ஆக்ரோஷமாக இருக்கும் ஹர்திக் பாண்டியா இவ்வாறு நடந்து கொண்ட விதம் ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அவர் இவ்வாறு சோகமாக நடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் கிடைத்த வெற்றியுடன் தற்போது குஜராத் அணி 18 புள்ளிகளுடன் முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி அடைந்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.