சீனியர் வீரர் என்றும் பார்க்காமல் மொஹம்மது ஷமியிடம் கோபத்தை வெளிப்படுத்திய குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா – வீடியோ இணைப்பு

0
1608
Hardik Pandya and Mohammad Shami

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே நேற்று இரவு நடந்த முடிந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 42 பந்துகளில் 50* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர் விளையாடிய ஹைதராபாத் அணி 19.1 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 46 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். ஆட்டநாயகன் விருதும் அவருக்கே கொடுக்கப்பட்டது.

- Advertisement -
முகமது ஷமி யை அனைவர் முன்னிலையிலும் திட்டி தீர்த்த ஹர்திக் பாண்டியா

நேற்று ஹைதராபாத் அணி சேஸிங் செய்து கொண்டிருக்கையில் 13வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை ராகுல் ட்டிருப்பாதிக்கு எதிராக அவர் வீசிய பொழுது, அந்த பந்தை லாவககமாக ட்டிருப்பாதி டீப் தேர்ட் மேன் திசையில் அடித்தார். அங்கே ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த முகமது ஷமி அந்த பந்தை பிடிக்க முயற்சி செய்யவில்லை.

ஒரு சில அடிகள் ஓடிவந்து கேட்ச் பிடிக்க அவர் முயற்சி செய்யாத காரணத்தினால், கேப்டன் ஹர்திக் பாண்டியா கோபமடைந்தார். கோபத்தில் மைதானத்தில் அனைவர் முன்னிலையிலும் முகமது ஷமியை அவர் திட்டி தீர்த்தார். பதிலுக்கு எதுவும் பேச முடியாமல் முகமது ஷமி மௌனமாக நடந்து சென்றார்.

இந்திய அணியில் தற்போது அனைத்து பார்மெட்டிலும் விளையாடிக் கொண்டிருக்கும் முகமது ஷமியை ஹர்திக் பாண்டியா இவ்வாறு அனைவர் முன்னிலையிலும் திட்டியது ரசிகர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. ஹர்திக் பாண்டியா எவ்வாறு அனைவர் முன்னிலையிலும் இவ்வாறு கோபத்தில் திட்டலாம் என்று தங்களுடைய கண்டனங்களை சமூகவலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அதுமட்டுமின்றி ஹர்திக் பாண்டியா அவ்வாறு திட்டிய வீடியோவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பரவலாக ஷேர் செய்து கொண்டு வருகின்றனர்.