தமிழ்நாடு பிரீமியர் லீகில் பிரபல இயக்குனர் கௌதம் மேனனின் மகன் ஆர்யன் யோஹன் அசத்தல் பந்துவீச்சு – வீடியோ இணைப்பு

0
244
Arya Yohan and Gautham Vasudev Menon

தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் பிரிமியர் லீக் சுருக்கமாக டி.என்.பி.எல் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மோதியே தொடரின் முதல் போட்டியே சூப்பர் ஓவர் சென்று இரசிகர்களைப் பரசவப்படுத்தியது. இந்தப் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வென்றது!

நேற்று டி.என்.பி.எல் தொடரில் இரண்டு போட்டிகள் என்பதால் நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் அணி சேலம் ஸ்பார்டான்ஸ் அணியோடு மோதியது. முதலில் டாஸில் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் கேப்டன் பாபா இந்தரஜித் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

- Advertisement -

இதன்படி சேலம் ஸ்பார்டான்ஸ் அணிக்குத் துவக்க ஆட்டக்காரர்களாக ஜாபர் ஜமால், கோபிநாத் களமிறங்கினார்கள். அதிசயராஜ் டேவிட்சன் வீசிய முதல் ஓவரில் 11 ரன்கள் சேலம் ஸ்பார்டான்ஸ் அணிக்குக் கிடைத்தது.

இரண்டாவது ஓவரை வீச வந்த, டி.என்.பி.எல் தொடருக்கு அறிமுக வீரரான ஆர்ய யோகன் மேனன் முதல் பந்திலேயே, ஜாபர் ஜமாலின் விக்கெட்டை சஞ்சய் யாதவிடம் கேட்ச் கொடுக்க வைத்து கைப்பற்றி அசத்தினார். இவர் மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் கெளதம் வாசுதேவ மேனன் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இவர் மூன்று ஓவர்கள் வீசி 26 ரன்களை விட்டுக்கொடுத்து, ஒரு கைப்பற்றினார்.

சேலம் ஸ்பார்டான் அணிக்குத் துவக்க ஆட்டக்காரர்கள் ஏமாற்றினாலும் அடுத்து வந்த கவின் 37 பந்துகளில் 48 ரன்களையும், டேரில் பெரோரா 49 பந்துகளில் 60 ரன்களையும் அடிக்க, இருபது ஓவர்களின் முடிவில் சேலம் ஸ்பார்டான் அணி ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்களை எடுத்தது.

- Advertisement -

அடுத்துக் களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி சூர்யபிரகாஷ், பாபா அபராஜித், அஜிடேஸ் ஆகியோரது சராசரியான பேட்டிங் பங்களிப்பால், 17.4 ஓவர்களில் மிக எளிதாய் சேலம் ஸ்பார்டான்ஸ் அணியை வீழ்த்தியது. 25 பந்துகளில் ஐந்து சிக்ஸர், ஒரு பவுண்டரியோடு 48 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிபெற வைத்த அஜிடேஸ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்!