நேற்று நவிமும்பையில் மும்பையும் பெங்களூரும் மோதிக்கொண்ட ஆட்டத்தில் பெங்களூர் வென்றது. அந்த ஆட்டத்தில் மிக அழகான சுவாராசியமான நிகழ்வொன்று நடந்தேறி இருக்கிறது.
பெங்களூர் அணி என்று எடுத்துக்கொண்டால் ராகுல், கும்ப்ளே என்ற பெயர்களை எல்லாம் தாண்டி, முதல் பெயராக நினைவுக்கு வருவது விராட்கோலி பெயர்தான். அவருக்குச் சமமான இடத்தை பெங்களூர் இரசிகர்களிடம் ஒருவர் பெற்றிருக்கிறார் என்றால் அது ஏ.பி.டிவிலியர்ஸ்தான். அதற்கடுத்துதான் தி பாஸ் கெயிலும் கூட. ஏ.பி.டிவிலியர்சும் விராட்கோலியும் நல்ல நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு தான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக டிவிலியர்ஸ் அறிவிக்க, அவரது இரசிகர்களுக்கு இது பெரிய இழப்பாக இருந்தது. விராட் கோலிக்குமே கூட. இந்த நிலையில்தான் இந்த ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பையில் தென்ஆப்பிரிக்காவிலிருந்து ஏபிடியை போலவே விளையாடும் பேபி ஏ.பி.டி உலகிற்கு அறிமுகமானார்.
பேபி ஏ.பி.டி தனக்குப் பிடித்த வீரர்கள் ஏ.பி.டியும், விராட்கோலியும், தனக்குப் பிடித்த அணி ஆர்.சி.பி என கூறியிருந்தார். எப்படியும் இவரை ஏலத்தில் பெங்களூர் வாங்கும் என்று இரசிகர்கள் நம்பியிருக்க, இவரை மும்பை வாங்கியிருந்தது.
நேற்றைய ஆட்டத்தில் பெங்களூருக்கு இரண்டு ஓவர்களில் எட்டு ரன்கள் மட்டுமே தேவைப்பட, 19வது ஓவரை பேபி ஏ.பி.டி இடம் ரோகித் தந்தார். தன் ஹீரோவுக்கு எதிராக பேபி ஏ.பி.டி வீசிய முதல் பந்திலேயே ஹீரோ அவுட். அதுவொரு சர்ச்சையான அவுட்தான்!
First interaction between Virat Kohli and Dewald Brevis. pic.twitter.com/5IFaurZTdd
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 10, 2022
ஆட்டம் முடிந்த பிறகு பேபி ஏ.பி.டி தன் ஹீரோவான விராட் கோலியை சந்திக்க, விராட்கோலி விளையாட்டாக “இளைஞனே இது நல்ல முதல் சந்திப்பு. நீ என் விக்கெட்டை கைப்பற்றியது” என்று உரையாடியிருக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது!