ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மார்னஸ் லாபஸ்சாக்னே 103 ரன்கள் குவித்து அசத்தினார்.
பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 236 ரன்களுக்கு பத்து விக்கெட்டுகளையும் இழந்து இக்கட்டான நிலையில் மாட்டிக்கொண்டது. 237 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை நேற்று ஆஸ்திரேலிய அணி விளையாட தொடங்கியது. 4-வது நாள் ஆட்டமான இன்று ஆஸ்திரேலிய அணி அதனுடைய 2வது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்து உள்ளது.
திடீரென ஆஃப் ஸ்பின் பவுலிங் போட்ட ராபின்சன்
ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி கொண்டிருந்த பொழுது, இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ராபின்சன் திடீரென கூலிங்கிளாஸ் மாட்டிக் கொண்டவாறு கூலாக ஆஃப் ஸ்பின் பவுலிங் போட்டார். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் சிறிய காயம் காரணமாக மைதானத்தை விட்டு சில நிமிடங்கள் வெளியேறினார்.
அவர் இல்லாத நேரத்தில் அவருக்கு பதிலாக ஒல்லி ராபின்சன் சில ஓவர்கள் ஸ்பின் பந்து வீச்சு வீசினார். கூலிங் கிளாஸ் அணிந்தவாறு அவர் ஆஃப் ஸ்பின் பந்து வீச்சு வீசிய விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அவர் ஸ்பின் பௌலிங் போடும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருவது குறிப்பிடத்தக்கது. ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக ராபின்சன் சுழற்பந்து வீச்சாளராக மாற வேண்டியக் கட்டாயம் ஏற்ப்பட்டது என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
Ollie Robinson bowling spin#Ashes2021 #AUSvENG #Ashes #OllieRobinson pic.twitter.com/retDMU5jS5
— cricket_meme_haul (@cric_meme_haul) December 19, 2021
இங்கிலாந்து அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற 468 ரன்கள் தேவை. இன்றைய பாதி நாள் மற்றும் கடைசி நாளான நாளை முழுவதுமாக இங்கிலாந்து அணி பேட்டிங் விளையாடியாக வேண்டும். சுமார் 130 ஓவர்கள் இருக்கும் நிலையில், இங்கிலாந்து அணி நிதானமாக விளையாடி இந்த இலக்கை அடையுமா அல்லது இறுதி வரை தாக்குபிடித்து இந்த போட்டியை டிரா செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.