அறிமுகப் போட்டியிலேயே அதிரடி ; பேபி ஏபிடி பிரிவீஸ் அடித்த ‘ நோ லுக் சிக்ஸ் ‘ வைரல் – வீடியோ இணைப்பு

0
917
Dewald Brevis No look Six

ஐபிஎல் தொடரில் தற்போது மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் இன்று இரண்டு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் வீரர் டிம் டேவிடுக்கு பதிலாக டிவால்ட் பிரேவிஸ் மற்றும் அன்மோல் பிரீட் சிங்குக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளனர்.

ஐபிஎல் போட்டியில் களமிறங்கியுள்ள டிவால்ட் பிரேவிஸ்

சமீபத்தில் நடந்து முடிந்த அண்டர் 19 உலக கோப்பை தொடரில் 506 ரன்கள் குவித்து தென்ஆப்ரிக்க அணியை சேர்ந்த டிவால்ட் பிரேவிஸ் தொடர் நாயகன் விருதை வென்றார். இவர் விளையாடும்போதும் அப்படியே அச்சு அசல் ஏபி டிவிலியர்ஸ் விளையாடுவதை பார்ப்பது போலவே இருக்கும். அதன் காரணமாகவே இவரை அனைவரும் செல்லமாக பேபி ஏபி என்று அழைப்பார்கள். இவரை மும்பை இந்தியன்ஸ் அணி சமீபத்தில் நடந்து முடிந்த மெகா ஏலத்தில் மூன்று கோடி ரூபாய்க்கு கைப்பற்றியிருந்தது.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் இரண்டு போட்டிகளில் அணியில் இடம்பெறாத இவர் இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் மூன்றாவது போட்டியில் இடம் பெற்றுள்ளார். அறிமுகமான முதல் போட்டியில் 19 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உட்பட 29 ரன்கள் குவித்துள்ளார்.

ஆட்டத்தின் எட்டாவது ஓவரை வருன் சக்கரவர்த்தி வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை டிவால்ட் பிரேவிஸ் டீப் மிட் விக்கெட் திசைக்கு தூக்கி அடித்தார்.ஆஃப் ஸ்டம்ப் பக்கமாக அவர் வீசிய பந்தை சாமர்த்தியமாக கணித்து டிவால்ட் பிரேவிஸ் டீப் மிட் விக்கெட் திசை பக்கமாக சிக்சர் அடித்தார் . இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர் சிக்சர் அடித்த உடன் அந்த பந்தை துளி கூட கண்டுகொள்ளவில்லை. அவர் அவ்வாறு சிக்சர் அடித்த விதம் மிக ஸ்டைலாக இருந்தது. அவர் அடித்த அந்த ஷாட்டை ரசிகர்கள் தற்பொழுது வெகுவாக பாராட்டு கொண்டிருக்கின்றனர்.

டிவால்ட் பிரேவிஸ் மும்பை அணிக்கு களம் இறங்கிய உடன் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களுடைய உற்சாகத்தை வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

டுவிட்டர் வலைதளத்தில் ரசிகர் ஒருவர் ஃபேப் டு பிளேசிஸ் தன்னுடைய சர்வதேச டி20 போட்டியில் விளையாடுவதற்கு முன்பாகவே ஐபிஎல் தொடரில் களம் இறங்கி விளையாடினார். அதேபோல தற்பொழுது டிவால்ட் பிரேவிஸ்சும் சர்வதேச அளவில் விளையாடுவதற்கு முன்பாக தன்னுடைய முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்கியிருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ரசிகர் அற்புதமான ஆட்டக்காரர் இவருடைய செல்லப்பெயர் பேபி ஏபி. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள் என்றும், மறுபக்கம் டிம் டேவிட் அணியில் இடம்பெறவில்லை. அது சற்று வருத்தத்தை தருகிறது என்றும் பதிவிட்டுள்ளார். இவ்வாறு ரசிகர்கள் தங்களுடைய பலதரப்பட்ட கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

முதலில் பேட்டிங் விளையாடிக் கொண்டிருக்கும் இந்தியன்ஸ் அணி தற்போது 13 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.