ஒரு வருடம் கேப்டனாக இருக்க மாட்டிர்களா ? கேப்டன் தோனி பதவி விலகியப் பிறகு டெவோன் கான்வே அவரிடம் பேசியது – வீடியோ இணைப்பு

0
148
Devon Conway about MS Dhoni quitting Captaincy

ஐ.பி.எல் 15-வது சீசன் கடந்த வாரத்தில் ஆரம்பத்து, ஆட்டங்கள் பல திருப்பங்களோடு நடந்து வருகிறது. மோதிய அணிகளின் அடிப்படையில், வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்ட அத்தனை அணிகளும் தோல்வியே அடைந்திருக்கிறது. குறிப்பாக இளம் கேப்டன்களின் அணிகளே வெற்றி அடைந்திருக்கின்றன.

ஆனால் ஐ.பி.எல் ஆரம்பிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாய் அறிவித்து, மொத்த ஐ.பி.எல் களத்தையும் பரபரப்பாக்கினார். சென்னை அணி நிர்வாகம் இதனையடுத்து ரவீந்திர ஜடேஜாவை கேப்டனாக அறிவித்தது. தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்த முறை பரபர திருப்பங்கள் உண்டாக ஆரம்பித்து விட்டது.

- Advertisement -

மேலும் மெகா ஏலத்தின் போதே சென்னை அணிக்குறித்தான விவாதங்கள், விமர்சனங்கள் சென்னை அணியின் இரசிகர்களாலேயே காரசாரமாக சமூக வலைத்தளங்களில் வைக்கப்பட்டது. காரணம் தோனிக்கு அடுத்து சென்னையின் அணியின் தூணாய் இருந்த சுரேஷ் ரெய்னாவை ஏலத்தில் கேட்காதது, கடந்த சீசனில் 600+ ரன்கள் அடித்த பாஃப் டூ பிளிசஸ் மேல் பணம் போட விரும்பாததும் ஆகும்.

இந்த நிலையில் ருதுராஜூடன் துவக்க ஆட்டக்காரராக, சென்னை அணியின் தலைமைப் பயிற்சியாளரான ஸ்டீபன் ப்ளமிங்கின் அறிவுரைப்படி, நியூசிலாந்தின் விக்கெட் கீப்பர் இடக்கை பேட்ஸ்மேன் டெவோன் கான்வோ வாங்கப்பட்டார். இவரின் ஆட்டம் எப்படியிருக்கும்? பாஃப்பின் இடத்தை நிரப்புவாரா? என்றெல்லாம் சென்னை அணியின் இரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பிருக்கிறது.

இப்படிப்பட்ட பெரிய எதிர்பார்ப்புக்குரிய டெவோன் கான்வோ, மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் முடிவை எடுத்த போது, அதுக்குறித்து அவரோடு தான் மேற்கொண்ட சிறு உரையாடல் பற்றி தெரிவித்திருந்தார்.

- Advertisement -

அதில் “மகேந்திர சிங் தோனியின் தலைமையின் கீழ் நான் ஒரு ஆண்டாவது விளையாட விரும்பினேன். இதுக்குறித்து நான் அவரிடம் கொஞ்சம் பேசியிருந்தேன். அப்போது நான், நீங்கள் இந்த வருடம் கேப்டனாக தொடர மாட்டீர்களா? என்று கேட்டபொழுது, அவர், தொடரமாட்டேன். ஆனால் உங்களோடு உங்களைச் சுற்றிதான் இருப்பேன் என்று கூறினார். ஜடேஜா, தோனிக்கு நடுவில் அமர்ந்து மதிய உணவு உண்ணும் வாய்ப்பு கிடைத்தது. இது அவர்களைப் புரிந்துகொள்ள ரொம்ப உதவியாக இருந்தது. இருவரும் அடக்கமான, பாசாங்கு அற்ற எதார்த்தமான மனிதர்கள்” என்று குறிப்பிட்டார்!