வீடியோ: திக்திக் கடைசி ஓவர் கடைசி பால்… இந்தியாவை பைனலுக்குள் போகவைத்த அந்த ஒரு ரன்!

0
6803

இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வாய்ப்பை உறுதி செய்த அந்த ஒரு ரன்னின் வீடியோவை கீழே பார்ப்போம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டியை எட்டியது. இந்திய அணிக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதால் இறுதிப் போட்டிக்கான இடத்தை உறுதி செய்தது.

- Advertisement -

இந்த புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்திய அணிக்கு இன்னும் வாய்ப்பு உறுதியாகாமல் இருந்தது. அதை உறுதி செய்ய, நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது.

ஒருவேளை டிரா அல்லது தோல்வியை பெற்றுவிட்டால், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் தொடரில் வரும் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும் என்ற நிலையும் இந்திய அணிக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இலங்கை 335 ரன்கள் அடித்தது நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 373 ரன்கள் அடித்தது.

- Advertisement -

இரண்டாவது இன்னிங்சில் 302 ரன்கள் அடித்து, 284 ரன்கள் முன்னிலை பெற்றது இலங்கை அணி. 285 ரன்களை சேஸ் செய்ய களமிறங்கிய ஐந்தாம் நாள் நியூசிலாந்து அணிக்கு முதல் ஷெஷன் மழை காரணமாக நடைபெறவில்லை. அதனால் மீதமிருக்கும் நேரத்திற்குள் இவ்வளவு பெரிய இலக்கை எட்ட முடியுமா? என்ற சந்தேகம் நிலவியது.

ஆனால் அதை டேரல் மிட்ச்சல் மற்றும் கேன் வில்லியம்சன் இருவரும் அமைத்த பார்ட்னர்ஷிப் முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது. மிட்ச்சல் 81 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். போட்டியின் கடைசி ஓவர் வரை போராடிய கேன் வில்லியம்சன் சதம் விலாசினார்.

கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு மூன்று விக்கெட்டுகள் தேவைப்பட்டது. அதேநேரம் நியூசிலாந்து அணி வெற்றி பெற எட்டு ரன்கள் தேவைப்பட்டது. இரண்டாவது பந்தில் மேட் ஹென்றி ரன் அவுட் ஆனார். மீதம் இரண்டு விக்கெட்டுகள் இலங்கை அணிக்கு தேவைப்பட்டது.

நியூசிலாந்து அணிக்கு 3 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கேன் வில்லியம்சன் ஒரு பவுண்டரி அடித்து நம்பிக்கை கொடுத்தார். கடைசி இரண்டு பந்தில் ஒரு ரன் என தேவைப்பட்டபோது, ஒரு பவுன்சாரை வீசினார் அஷிதா பெர்னாண்டோ, அந்தப் பந்தில் அடிக்க முடியவில்லை. கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. அதை அடிக்க முடியவில்லை என்றாலும் ஓடி எடுக்க முயற்சித்தனர். அப்போது பந்தை பிடித்த கீப்பர், ரன் அவுட் செய்ய முயற்சித்தது வீணாகியது. பின்னர் பவுலர் அதைப்பிடித்து மறு திசையில் ரன் அவுட் செய்ய முயற்சித்தார்.

நிமிடம் ரன் அவுட் ஆகிவிட்டதோ என நினைக்கத் தோன்றியது. ஆனால் மூன்றாம் நடுவரிடம் சென்ற முடிவில் அவுட் இல்லை என்று உறுதியானதால் கடைசி பந்து வரை சென்ற ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த திக் திக் கடைசி தந்தை வீடியோவை கீழே பார்ப்போம்.