மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி தற்போது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி பேட்டிங் விளையாடிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியை ஓபனிங் வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். பின்னர் வந்த பிரெவீஸ் 4 ரன்களில் ஆட்டமிழக்க, மும்பை அணி திக்குமுக்காடியது.
பின்னர் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா நிதானமாக விளையாடி மும்பை அணிக்கு ரன் சேர்த்தனர். மும்பை அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 43 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர் உட்பட 51 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் தற்போது குவித்துள்ளது.
சென்னை அணியில் மிக அற்புதமாக பந்துவீசிய முகேஷ் சவுத்ரி 3 ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை( ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன் மற்றும் பிரெவீஸ்) கைப்பற்றி அசத்தினார்.
டுவைன் பிராவோவுக்கு தலையில் முத்தமிட்ட கீரோன் பொல்லார்ட்
மும்பை அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் கீரோன் பொல்லார்ட் பேட்டிங் விளையாட வந்தார். அவருக்கு எதிராக டுவைன் பிராவோ பந்து வீசினார். நம் அனைவருக்கும் தெரியும் இவர்கள் இருவரும் மைதானத்தில் மாற்றி மாற்றி எவ்வாறு சேட்டை செய்வார்கள் என்று.
சென்னை மற்றும் மும்பை அணிகள் இடையிலான போட்டி வந்துவிட்டாலே இவர்கள் இருவரும் என்ன செய்யப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் வந்துவிடும்.
அதேபோல இன்று டுவைன் பிராவோ பொல்லார்ட்டுக்கு எதிராக வீசிய பந்தை பொல்லார்டு தடுப்பாட்டம் போட்டு தடுத்தார். தன் பக்கம் வந்த பந்தை பிராவோ பொல்லார்ட்டுக்கு எதிராக வேகமாக வீசினார். வீசிவிட்டு பொல்லார்ட்டை எதிர்நோக்கி ப்ராவோ சென்றபொழுது, பொலார்ட்டு பதிலுக்கு டிவைன் பிராவோவின் தலையில் அன்பு முத்தமிட்டார். இக்காட்சி அனைத்து ரசிகர்களையும் நெகிழ்ச்சியடைய செய்தது. பொல்லார்டு டுவைன் பிராவோவின் தலையில் முத்தமிட்ட காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.
Pollard kisses Bravo 😍🤣😱 pic.twitter.com/OPW8qpW1QJ
— Big Cric Fan (@cric_big_fan) April 21, 2022