மும்பை அணிக்கு எதிராக விக்கெட் வீழ்த்தியப் பின் புஷ்பா திரைப்பட டான்ஸ் ஆடி கொண்டடிய பிராவோ

0
337
Dwayne Bravo Pushpa dance

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 32வது போட்டி, நவிமும்பையின் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில், ஐ.பி.எல் அரசர்களான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இன்டியன்ஸ் அணியும் தற்போது பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

சென்னை அணி ஆறு ஆட்டங்களில் ஐந்து ஆட்டங்களைத் தோற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்திலும், மும்பை அணி ஆடிய ஆறு ஆட்டங்களையும் இழந்து, புள்ளி பட்டியலின் கடைசி இடத்தில் இருக்கிறது. மும்பை அணி சாம்ஸ், மெரிடித், சோகி ஆகிய மூன்று மாற்றங்களைச் செய்திருக்க, சென்னை அணி சான்ட்னர், ப்ரட்டோரியஸ் ஆகிய இரண்டு மாற்றங்களைச் செய்திருந்தது.

- Advertisement -

முணலில் டாஸை ஜெயித்த ஜடேஜா பவுலிங்கை தேர்வு செய்ய, மும்பைக்கு பேட்டிங்கில் ஓபனிங் பண்ண வந்த ரோகித்-இஷானை முகேஷ் டக்-அவுட் ஆக்கினார். அடுத்து வந்த ஒருவரும் நிற்காமல் வெளியேற, திலக் வர்மா மட்டுமே அரைசதமடிக்க, இருபது ஓவரில் முடிவில் மும்பை அணி 155 ரன்களை எடுத்திருக்கிறது.

இதில் வழக்கம்போல் பிராவோ புதிய முறையில் விக்கெட் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். சான்ட்னர் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் தப்பிய ஷோகினை, பிராவோ உத்தப்பாவை வைத்து வெளியேற்றி, புஷ்பா டான்ஸ் ஆடி கொண்டாடினார். சென்னை இரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இதை பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்!