112 மீட்டர் சிக்ஸ் விளாசிய பேபி ஏபி ; ராகுல் சாஹர் ஓவரில் 4 சிக்ஸர்கள் உட்பட 28 ரன்கள் சேர்த்து அமர்களப் படுத்திய பிரீவிஸ் – வீடியோ இணைப்பு

0
481
Dewald Brevis

2022 ஐ.பி.எல் தொடர் 15-வது சீசனின் 23-வது போட்டி, ரோகித்தின் மும்பை அணிக்கும், மயங்க்கின் பஞ்சாப் அணிக்கும் இடையே, மஹாராஷ்ட்ராவின் புனே மைதானத்தில் நடந்து வருகிறது. இங்கு பனிப்பொழிவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!

முதலில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பஞ்சாப்பை பேட்டிங் செய்ய அழைக்க, களம் புகுந்த தவானும், மயங்க்கும் அதிரடி அரைசதம் அடிக்க, இறுதியில் வந்த ஜிதேந்தர் சிங்கும் அதிரடியில் இறங்க, இருபது ஓவர்களின் முடிவில் 198 ரன்களை குவித்தது பஞ்சாப்.

- Advertisement -

அடுத்து மும்பைக்கு பேட்டிங்கில் ஓபனிங்கில் களமிறங்கிய ரோகித்தும் இஷானும் ஏமாற்ற, அடுத்து வந்த பேபி ஏபிடியும் திலக் வர்மாவும் பஞ்சாப் பந்துவீச்சை நொறுக்கத்தள்ள ஆரம்பித்தார்கள்.

முதலில் சற்று பொறுமையைக் காட்டிய பேபி ஏபிடி பின்பு ஓடியன் ஸ்மித் ஓவரில் சிக்ஸரை அடித்து, அதிரடியை ஆரம்பித்தார். குறிப்பாக ஒன்பதாவது ஓவரை வீசவந்த ராகுல் சஹாரை வெறுக்க வைத்து விட்டார்.

அந்த ஒவரில் முதல் பந்தில் பவுண்டரி அடித்த அவர், அதற்கடுத்த நான்கு பந்துகளில் தொடர்ந்து லாங்-ஆன், டீப் மிட் விக்கெட் திசைகளில் தொடர்ந்து சிக்ஸர்களாக பறக்கவிட்டு அசத்தினார். ஒருநிமிசம் உற்றுப்பார்த்த பொழுதுதான் அது ஏபிடி இல்லை குட்டி ஏபிடி என்றே தெரிந்தது. இதே ஓவரில் ஒரு சிக்ஸரை 112 மீட்டருக்கு அடித்தார். இந்தத் தொடரில் அதிக தூரம் அடிக்கப்பட்ட சிக்ஸர் இதுதான்!

- Advertisement -

சமூகவலைத்தளங்களில் தற்போது பேபி ஏபிடியின் இந்த சிக்ஸர்கள் வைரலாகி வருகிறது!