விராட் கோலி அரை சதம் அடித்த மகிழ்ச்சியில் பலமாக சத்தம் போட்டு உற்சாகப்படுத்திய மனைவி அனுஷ்கா ஷர்மா – வீடியோ இணைப்பு

0
191
Anushka Sharma cheering Virat Kohli

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்துள்ளது.பெங்களூரு அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 53 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட 58 ரன்கள் குவித்துள்ளார்.

கம்பேக் கொடுத்துள்ள விராட் கோலி

இந்தப் போட்டிக்கு முன்னர் வரை 9 போட்டியில் விளையாடி இருந்த விராட் கோலி மொத்தமாகவே 128 ரன்கள் மட்டுமே குவித்திருந்தார். குறிப்பாக கடைசி மூன்று போட்டிகளில் அவர் 9 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். அதில் தொடர்ச்சியாக 2 கோல்டன் டக் அவுட் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மோசமான பார்மில் இருந்த அவர் இன்றைய போட்டியில் ஆறுதலான கம்பேக் கொடுத்துள்ளார். முதல் பந்தே இருந்து நிதானமாக விளையாடி நாற்பத்தி ஐந்தாவது பந்தில் தன்னுடைய அரைசதத்தை எட்டினார். அவருடைய அரை சதத்திற்கு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் உட்பட அனைவரும் எழுந்து நின்று உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

குறிப்பாக விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா சர்மா என்று மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டனர். விராட் கோலி அடித்த சிக்ஸருக்கும், அரை சதத்திற்கும் எழுந்து என்று உற்சாகம் பொங்க தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

சமூக வலைதளத்தில் விராட் கோலியின் ரசிகர்கள் அனைவரும் விராட் கோலியை பாராட்டி கொண்டிருக்கின்றனர். “மீண்டும் நல்ல டச்சில் தற்பொழுது விராட் கோலி இருக்கிறார். விராட் கோலிக்கு உறுதுணையாக ஒரு ரசிகரை போல அனுஷ்கா ஷர்மா கொண்டாடுகிறார். எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது விராட்கோலி இவ்வாறு அரைசதம் அடித்ததை பார்த்து”, என்பது போன்ற கமெண்ட்டுகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

8 போட்டிகளில் விளையாடி 7 போட்டியில் வெற்றி கண்டுள்ள குஜராத் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். மறுபக்கம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இன்றைய போட்டியையும் சேர்த்து 5 போட்டியில் 3ல் வெற்றி காண வேண்டும். எனவே இன்றைய போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெறும் பட்சத்தில் பிளே-ஆப் சுற்று வாய்ப்பு அந்தணிக்கு இன்னும் சுலபமாகும்.