பெர்குசன் வீசிய அதிவேகப் பந்தில் உடைந்த ராயுடுவின் பேட் – வீடியோ இணைப்பு

0
112
Ambati Rayudu broken bat

2022 ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் இரண்டாம் டபுள் ஹெட்டரின் இரண்டாவது போட்டியில் சென்னை அணியும், குஜராத் அணியும், மகாராஷ்ட்ரா புனே மைதானத்தில் மோதி வருகின்ற!

குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சிறிய காயத்தால் முன்னெச்சரிக்கையாக விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ரஷீத் கான் கேப்டன் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.

- Advertisement -

இன்றைய போட்டியில் பேட்டிங்கில் பலகீனமாய் இருக்கும் குஜராத் அணியை, தன் பேட்டிங் பலத்தால் வென்றே ஆகவேண்டிய சூழலில் சென்னை இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் இரசிகர்கள் சில மாற்றங்களைச் சென்னை அணியில் எதிர்பார்க்க, ஆனால் எந்த மாற்றங்களும் சென்னை அணியில் இல்லை.

டாஸ் வென்ற குஜராத் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்ய, சென்னையின் ஓபனர் உத்தப்பாவும், அடுத்து வந்த மொயின் அலியும் நிலைக்கவில்லை. ஆனால் ருதுராஜ் அம்பதி ராயுடு ஜோடி மிகப் பிரமாதமாக விளையாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் அதிவேக பெர்குசன் வீசிய ஆட்டத்தின் 13வது ஓவரில் உள்நோக்கி வேகமாக வந்த பந்தை அம்பதி ராயுடு அடித்தாட, பேட்டின் கீழ் முனை உடைந்தே விட்டது. ஆனாலும் அந்த ஓவரில் இந்த ஜோடி அதிரடியாய் ரன் சேர்த்தனர்!

- Advertisement -