பாகிஸ்தான் அணியுடன் மோதும் வாசிம் ஜாபரின் இந்திய பிளேயிங் லெவன்!

0
89
Wasim jaffer

இன்று ஐக்கிய அரபு எமிரேட்டில் துவங்க இருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும், உலக கிரிக்கெட் நாடுகள் மத்தியிலும் பெரிய கவனத்தைப் பெற்று இருக்கிறது. துவக்கப் போட்டியில் இலங்கை அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதிக்கொள்ள இருக்கின்றன!

இந்தியா பாகிஸ்தான் இலங்கை ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் ஹாங்காங் என ஆறு ஆகிய அணிகளை கொண்டு இந்த ஆசிய கோப்பை தொடர் நடைபெறுகிறது. இதற்கு இலங்கை ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் என ஒரு குழுவும் இந்தியா-பாகிஸ்தான் ஆங்காங் என இன்னொரு குழுவும் பிரிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதில் தத்தமது குழுவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்து சூப்பர் 4 என்ற சுற்றுக்குள் நுழையும். இந்தச் சுற்றில் நான்கு அணிகளும் மற்ற அலைகளை எதிர்த்து ஒரு முறை விளையாடும். இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி ஆசிய கோப்பையை கைப்பற்றும்.

இதுவரை மொத்தம் 14 ஆசியக் கோப்பை தொடர்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் 13 50 ஓவர் வடிவத்தில் நடத்தப்பட்டது, ஒன்றே ஒன்று 20 ஓவர் வடிவத்தில் நடத்தப்பட்டது. இப்போதைய ஆசிய கோப்பை தொடர் 20 ஓவர் கிரிக்கெட் வடிவத்தில் நடத்தப்படுகிறது. ஆசிய கோப்பையில் அதிகபட்சமாக இந்திய அணி ஏழு முறையும், இலங்கை அணி 5 முறையும், இதைத்தான் அணி 2 முறையும் கோப்பையை கைப்பற்றி இருக்கின்றன. கடைசியாக 2018ஆம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று இருந்தது.

இன்று துவங்கும் ஆசிய கோப்பையில் நாளை துபாய் மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஒரு போட்டி கிரிக்கெட் உலகத்தில் எக்கச்சக்க எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இந்த போட்டி கொடுத்தும் இரு அணிகள் குறித்தும் விளையாடும் அணி குறித்தும் கிரிக்கெட் முன்னாள் வீரர்கள் இடையே நிறைய பேச்சுகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

- Advertisement -

தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர், நாளை ஞாயிற்றுக்கிழமை இந்திய அணியை பாகிஸ்தான் அணி ஓடும்போதும் போட்டிக்கான தனது இந்திய அணியை வெளியிட்டு இருக்கிறார். மேலும் இவர் ஆசிய கோப்பை குறித்து பல முக்கிய கருத்துக்களை இணைய தளத்தில் பகிர்ந்து வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாசிம் ஜாபர் தனது அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மாவை வைத்திருக்கிறார். அதற்கடுத்த இரண்டு இடங்களில் விராட்கோலி சூர்யகுமார் யாதவ் வருகிறார்கள். பேட்டிங்கில் ஐந்தாவது இடத்தில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இருக்கிறார். ஆறாவது இடத்திற்கு வாசிம் ஜாபர் தினேஷ் கார்த்திக் இல்லை ரிஷப் பண்ட்டை வைத்திருக்கிறார். இவர் அணியில் சுழற்பந்து வீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா, சாகல், ரவி பிஷ்னோய் ஆகியோர் இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஸ்வர் குமார் அர்ஸ்தீப் சிங் ஆகியோர் இருக்கிறார்கள். இவரது அணியில் அஸ்வின், தீபக் ஹூடா ஆகியோருக்கு இடமில்லை. வாசிம் ஜாபர் இன் இந்திய அணிக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!