இந்திய கிரிக்கெட்

ருதுராஜ் ப்ளீஸ் சஞ்சுவை விட்ருங்க.. உங்க இஷ்டத்துக்கு ஆடனும்னா இத செய்யுங்க – ஜாபர் விமர்சனம்

தற்போது சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் தொடக்க ஆட்டக்காரராக இன்டன்ட் காட்டி ஆட வேண்டும் இல்லையென்றால் வேறு இடத்திற்கு மாற வேண்டும் என வாசிம் ஜாபர் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

இந்தத் தொடர் முழுக்க ருதுராஜ் பேட்டிங் மிகவும் மந்தமான முறையில் இருந்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் மட்டுமே சில ஆட்டங்களில் தாக்கு பிடித்து விளையாடும் நல்ல துவக்கத்தை கொடுத்து வருகிறார்.

ஏற்படும் அழுத்தம்

ருதுராஜ் தொடக்க ஆட்டக்காரராக பவர் பிளேவை பயன்படுத்தி ரன் எடுக்காமல் இருப்பதால் அது மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சாம்சனுக்கு பெரிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அவர் கட்டாயம் அடித்து விளையாட நெருக்கடி ஏற்பட்டு ஆட்டம் இழக்கிறார்.

இதற்கு அடுத்து வரக்கூடியவர்களுக்கும் ருதுராஜ் தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்துகிறார். இது அந்த அணிக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. கேப்டனே பெரிய தலைவலியாக மாறுகிறார்.

- Advertisement -

மாறிக்கொள்ளுங்கள்

இதுகுறித்து வாசிம் ஜாபர் பேசும்போது “ருதுராஜ் இண்டன்ட் காட்டி விளையாட வேண்டியது அவசியம். தொடக்க ஆட்டக்காரராக அவர் தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபட முடியாது. இது சாம்சனுக்கு ஒரு முனையில் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்திவிடுகிறது”

இதையும் படிங்க : விராட் ரோகித்தை பார்த்து அந்த வார்த்தையை மட்டும் யாரும் சொல்லாதீங்க.. இந்த ஐபிஎல் உதாரணம் – ரிக்கி பாண்டிங் கருத்து

“ஒருவேளை அவரால் முடியாது என்றால் அவர் நான்காவது இடத்திற்கு பவர் பிளேவுக்கு வெளியில் விளையாட சென்று விடலாம். தொடக்க ஆட்டக்காரராக உர்வில் படேல் வரலாம். பிறகு ருதுராஜ் பொறுமையாக பவர் பிளேவிற்கு வெளியே ஆட்டத்தை கட்டமைத்து எடுத்துச் செல்லலாம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts