இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரை துபாயில் ஒரே மைதானத்தில் விளையாடி வரும் நிலையில் அதை இந்த தொடரின் நேர்மை தன்மை குறித்து கேள்வி எழுவதாக பல முன்னாள் வீரர்கள் விமர்சித்திருந்தனர்.
இதுகுறித்த இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் இது குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர்
இந்திய அணி பாகிஸ்தான் சென்று சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் விளையாட மறுத்ததை அடுத்து இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் மாற்றியமைக்கப்பட்டது. வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டி மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டாவது போட்டி என இரண்டு போட்டிகளையும் துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் விளையாடி வெற்றி பெற்றது.
பாகிஸ்தானில் மற்ற நாடுகள் வெவ்வேறு இடங்களில் போட்டிகளை விளையாடி வரும் நிலையில், இந்திய அணி மட்டும் ஒரே இடத்தில் விளையாடுவது அந்த அணிக்கு அதிக நன்மை ஏற்படுத்தும் என பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். மேலும் இது இந்த தொடரின் நேர்மை தன்மையை கேள்வி எழுப்பும் வகையில் உள்ளது எனவும் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் பிசிசிஐ செய்திருக்க வேண்டிய விஷயம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
அட்டவணை இப்படி இருந்திருக்கலாம்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தியாவை சார்ஜா மற்றும் அபுதாபியில் தலா ஒரு போட்டி விளையாட சொல்லி இருக்க வேண்டும். ஒருவேளை அவர்களை வேறொரு ஹோட்டலில் தங்க அனுமதித்திருக்க வேண்டும். இது நடந்திருந்தால் இந்த விமர்சனங்கள் தற்போது எழுந்திருக்காது. இந்திய அணி பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை என்றால் ஒவ்வொரு நாட்டிற்கும் அந்தத் தேர்வு உண்டு. அரசியல் காரணமும் அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக இந்திய அணி அங்கு செல்லாமல் இருந்திருக்கலாம்.
இதையும் படிங்க:இந்திய அணிக்கு சாதகமா.? இதை ஏற்க மாட்டேன்.. பாவம் இதனால அழுத்தமே அவங்க மேலதான் – தெஆ வீரர் பேட்டி
இந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். எனவே இந்தியா இல்லாமல் இந்த போட்டி இல்லை. எனவே இந்த வகையான விமர்சனங்களை அடக்க அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் விளையாடியிருக்க வேண்டும்”என்று அவர் கூறியிருக்கிறார். இந்திய அணி வருகிற மார்ச் இரண்டாம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக கடைசிப் போட்டி விளையாட உள்ள நிலையில் அந்த போட்டியும் துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.






