இது சிஎஸ்கே டீமே கிடையாது.. நேத்து நடந்த அந்த விஷயம் இதுக்கு முன்ன பார்க்காதது – வாசிம் ஜாபர் விமர்சனம்

0
169
Jaffer

நேற்று சிஎஸ்கே அணி தங்கள் சொந்த மைதானத்தில் டெல்லி அணிக்கு எதிராக மீண்டும் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடிய விதமும் தோல்வியடைந்த விதமும் மிகவும் மோசமாக இருப்பதாக இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கவலை தெரிவித்திருக்கிறார்.

சிஎஸ்கே அணி இந்த போட்டிக்கு முன்பாக விளையாடிய மூன்று போட்டிகளில் முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக சொந்த மைதானத்தில் வென்றது. இதற்கு அடுத்து ஆர்சிபி அணிக்கு எதிராக சொந்த மைதானத்தில் தோற்று, அசாம் கவுகாத்தி மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக மீண்டும் தோல்வி அடைந்திருந்தது. இந்த நிலையில் சொந்த மைதானத்திற்கு மீண்டும் திரும்பிய சிஎஸ்கே அணி வரிசையாக மூன்று தோல்விகளை அடைந்திருக்கிறது.

- Advertisement -

ஒட்டுமொத்தமாக உடைந்த சிஎஸ்கே

சிஎஸ்கே அணியை பொறுத்தவரையில் தோல்விகள் அணியை பாதிக்காத வகையில் எப்பொழுதும் வீரர்கள் காணப்படுவார்கள். அவர்கள் அடுத்தடுத்த போட்டிக்கு தங்களை நம்பிக்கையாக தயார் செய்வார்கள். அந்த அளவிற்கு அணிக்குள் அமைதியான சூழ்நிலையை அணி நிர்வாகம் மற்றும் தோனி உருவாக்கி வைத்திருப்பார்கள். எந்த இடத்தில் தவறு நடந்ததோ அதை நோக்கி வேலை செய்வார்கள்.

இப்போது சிஎஸ்கே அணியை பார்க்கும் பொழுது வீரர்களிடம் நம்பிக்கை சுத்தமாக தெரியவில்லை. குறிப்பாக பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்யும்பொழுது அவர்கள் நம்பிக்கையற்றவர்கள் ஆகவும் தைரியம் அற்றவர்களாகவும் தெரிகிறார்கள். அவர்களுடைய ஷாட் செலக்சன் மிகவும் மோசமாக இருக்கிறது.

- Advertisement -

இதற்கு முன் இப்படி இல்லை

இதுகுறித்து வாசிம் ஜாபர் பேசும்பொழுது “சிஎஸ்கே டாப் ஆர்டர்கள் சரியாக விளையாடவில்லை. மேலும் சிவம் துபே சீக்கிரத்தில் ஆட்டம் இழந்தால் அவர்கள் சீக்கிரத்தில் கடையை மூடுவது போல தெரிகிறது. அவர்கள் எப்பொழுதும் போட்டியில் பின்னால் இருப்பதாக நினைக்கிறார்கள். இதனால் அவர்கள் வெற்றி பெற முயற்சியை செய்வது கிடையாது. அவர்களுடைய இந்த அணுகுமுறை எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் கடந்த இரண்டு போட்டிகளிலும் சீக்கிரத்தில் நம்பிக்கை இழந்தது கவலை தரக்கூடியது”

இதையும் படிங்க : என் ஆட்ட முறை மாற அவர்தான் காரணம்.. மணிக்கணக்கில் நாங்கள் பேசி தவறுகளை சரி செய்தேன் – கேஎல் ராகுல் பேட்டி

“அவர்கள் முன்கூட்டியே விக்கெட்டுகளை இழக்கிறார்கள். அவர்களுடைய ஷாட் செலக்சன், இல்லை அவர்களுடைய மோசமான ஃபார்ம் எதுவாக இருந்தாலும் சரி, அவர்கள் தங்களைச் சுற்றி நிறைய வீரர்கள் மாற்றப்பட்டு கொண்டே இருப்பதை பார்க்கிறார்கள். எனவே அவர்களுக்கு தாங்கள் உள்ளே இருக்கிறோமா அல்லது வெளியேற்றப்பட்டு விடுவோமா என்கின்ற சந்தேகம் இருக்கிறது. இது வழக்கமான சிஎஸ்கே அணி சூழ்நிலை கிடையாது. அவர்களிடம் எப்பொழுதும் தெளிவும் அமைதியும் இருக்கும். இதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -