73 ஸ்ட்ரைக் ரேட் 35 ரன்.. துபேவா சாம்சானா.. வெ.இ-ல் என்ன செய்யலாம்?.. வாசிம் ஜாபர் பேட்டி

0
261
Jaffer

இந்திய அணி ஐசிசி ஒன்பதாவது டி20 உலக கோப்பை தொடரில் முதல் சுற்று முழுவதும் அமெரிக்காவில் விளையாடுகிறது. இதற்கு அடுத்து மொத்த போட்டிகளையும் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது. இது குறித்தும் டீம் காம்பினேஷன் குறித்தும் வாசிம் ஜாபர் பேசியிருக்கிறார்.

அமெரிக்காவில் இந்திய அணி முதல் சுற்றில் நான்கு போட்டிகளையும் விளையாடுகிறது. இதில் கடைசிப் போட்டி ஜூன் 15ஆம் தேதி கனடா அணிக்கு எதிராக ஃப்ளோரிடா மைதானத்தில் நடக்க இருக்கிறது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து இந்திய அணி மேற்கொண்டு டி20 உலகக் கோப்பையில் மொத்த போட்டிகளையும் விளையாட வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது. இதில் முதலில் சூப்பர் 8 சுற்றில் மூன்று போட்டிகளையும், அதிலிருந்து தகுதி பெற்றால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளையும் விளையாடுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் சூழ்நிலையைப் பொறுத்தவரையில் அங்கும் பெரிய ரன்கள் குவிக்க முடியாது. ஆனால் 150 முதல் 170 ரன்கள் வெற்றி பெறுவதற்கான ஸ்கோராக எல்லா மைதானங்களிலும் இருக்கும்.அமெரிக்க நியூயார்க் மைதானம் போல பேட்ஸ்மேன்களுக்கு மிக மோசமாக இருக்காது. இந்த நிலையில் சிவம் துபே மூன்று போட்டிகளில் 73 ஸ்ட்ரைக் ரேட்டில் 35 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். இவரது இடத்தில் சஞ்சு சாம்சன் விளையாட வேண்டும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

தற்பொழுது இதுகுறித்து பேசி இருக்கும் வாசிம் ஜாபர் “நம்பர் நான்கில் சஞ்சு சாம்சனுக்கு ஒரு வாய்ப்பு இருக்கலாம். ஆனால் சிவம் துபேவுக்கு ஓரிரு ஆட்டங்கள் மட்டுமே வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவருக்கு இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்புகள் தர விரும்பும் என்று நான் நினைக்கிறேன்.அதே சமயத்தில் இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து முன்னோக்கி செல்வதற்கு ஜெய்ஸ்வால் பற்றி யோசிக்க வேண்டும்.

இதையும் படிங்க :கோலிய வைச்சு ரோகித் அந்த ஒரு வேலையை செய்யக்கூடாது.. எல்லாமே அப்செட் ஆயிடும் – லாரா கருத்து

வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் நீங்கள் பவர் பிளேவில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். இங்கு நீங்கள் எச்சரிக்கையாக விளையாடினால் எங்கும் செல்ல முடியாது. இங்குள்ள ஆடுகளங்களில் எந்த இடத்தில் பந்து வீச வேண்டும் என்று பந்துவீச்சாளர்களுக்கு தெரியும். எனவே அவர்கள் தொடர்ந்து அந்த இடத்தில் வீசுவார்கள். எனவே நீங்கள் தைரியமாக விளையாடி அதை மாற்ற வேண்டும். ரிஷப் பண்ட் தைரியமாக விளையாடுவதற்கு வெகுமதிகள் கிடைப்பதை நீங்கள் பார்க்கலாம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -