தற்போது சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளாக ரன் எடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார். அவர் ரன் எடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வாசிம் ஜாபர் பேசியிருக்கிறார்.
சிஎஸ்கே அணி தொடர்ந்து மூன்று போட்டிகளாக தோல்வியடைந்தது. இந்த மூன்று போட்டிகளிலும் ஆட்டத்தை அணுகும் விதத்தில் ருதுராஜ் ஒரு பேட்ஸ்மேனாக மிகவும் மோசமாக இருந்தார். நேற்று டெல்லிக்கு எதிரான நான்காவது ஆட்டத்திலும் 18 பந்துகளை சந்தித்து 15 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
சிஎஸ்கே கேப்டனின் பிரச்சனை
ருதுராஜ் பேட்டிங்கை நம்பிக்கை உடன் துவங்காமல் ஆடுகளத்தின் தன்மைக்கு நிறைய மரியாதை கொடுக்கிறார். 20 ஓவர் வரையில் போட்டியை எப்படி எடுத்துச் செல்வது என்பது போலவே விளையாடுகிறார். ஆனால் இப்போது அந்த மாதிரியான ஆட்டம் எல்லாம் மலையேறிவிட்டது.
மேலும் சிஎஸ்கே அணியில் இப்பொழுது பேட்டிங் யூனிட் மிகவும் நீண்டதாகவே இருக்கிறது. எனவே ஒருவர் அதிரடியாக விளையாட முயற்சி செய்து ஆட்டம் இழந்தால் கூட அடுத்து வரக்கூடியவர் ரன் எடுத்துக் கொண்டு சென்று விட முடியும்.
விராட் செய்த அதே தப்பு
இது குறித்து வாசிம் ஜாபர் பேசும்போது “ருதுராஜ் பெரிய ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஒரு வீரர். ஒரு தொடக்க ஆட்டக்காரராக நீங்கள் ஆரம்பத்திலேயே 70, 80 ரன்கள் எடுப்பது குறித்து யோசிக்க கூடாது. சிறந்த தொடக்கத்தைக் கொடுக்கத் தான் பார்க்க வேண்டும். அவர் மிகவும் அதிரடியாக ஆட கூடியவர் இல்லை. அப்படி சொன்னால் அவர் அதிகம் ரெஸ்ட் எடுக்க வேண்டி வரும். அவர் சதமும் ஐபிஎல் தொடரில் அடித்திருக்கிறார். ஆனால் தற்போது தன்னைத் தானே கட்டுப்படுத்தி கொள்கிறார்”
இதையும் படிங்க : என் தம்பி ஹர்திக்கின் மும்பையை தோற்கடிப்பேன்.. போன முறை நடந்ததை மறக்க வேண்டாம் – குர்னால் பாண்டியா சவால்
“விராட் கோலி ஆரம்ப காலங்களில் பெரிய ரன்கள் எடுக்க வேண்டும் என்று விளையாடினார். ஆனால் தற்போது அவர் தன்னை மாற்றிக் கொண்டு முடிந்த வரையில் வேகமாக ரன் எடுக்க பார்க்கிறார். ருதுராஜும் பெரிய ரன்கள் எடுத்த நினைப்பதை விட்டுவிட்டு தாக்கத்தை கொடுக்குமாறு விளையாட யோசிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.






