6 டீம்.. 2 பிரிவு.. ஏம்பா இத நீ போன மாசமே சொல்லல.. வாகனுக்கு வாசிம் ஜாபர் பதிலடி

0
81
Jaffer

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் மைக்கேல் வாகனுக்கும் இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபருக்கும் எப்பொழுதும் ஏழாம் பொருத்தமாகவே சமூக வலைதளத்தில் இருந்து வரும். இந்த நிலையில் மீண்டும் இருவருக்கு இடையே அப்படியான ஒரு சம்பவம் சமூக வலைதளத்தில் நடந்திருக்கிறது.

மைக்கேல் வாகன் இந்திய கிரிக்கெட் குறித்து ஏதாவது கேலி கிண்டல்களை செய்து கொண்டே இருப்பார். அதே சமயத்தில் இங்கிலாந்து இந்திய நிகழ் மோதும் தொடர்கள் வந்துவிட்டால் அவர் கேலி கிண்டல்களை விட்டு விமர்சனத்திற்கு தாவி விடுவார். இதன் காரணமாக வாசிம் ஜாஃபர் மைக்கேல் வாகனுக்கு பதிலடி தருவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்.

- Advertisement -

இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம்

தற்பொழுது இலங்கை அணி இங்கிலாந்துக்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிக் கொண்டு வருகிறது. நடுவில் பல வருடங்கள் இங்கிலாந்து நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் இலங்கை அணி மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மைக்கேல் வாகன் இலங்கை அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை விளையாடி தோற்ற விதத்தை வைத்து, டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அணிகளை இரண்டு பிரிவாக பிரிக்க வேண்டும் எனவும், முதல் ஆறு இடங்களில் இருக்கும் அணிகள் ஒரு பிரிவாகவும், அடுத்த ஆறு இடத்தில் இருக்கும் அணிகள் இரண்டாவது பிரிவாகவும் பிரித்து நடத்தப்பட வேண்டும் எனவும் கூறியிருந்தார். அதே சமயத்தில் அனைவருக்கும் நிதியை ஒரே போல கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

வாசிம் ஜாஃபர் பதிலடி

இந்த நிலையில் மைக்கேல் வாகன் கூறியிருக்கும் கருத்துக்கு பதிலடி தருவது போல கிண்டலாக பேசியிருக்கும் வாசிம் ஜாஃபர் கடந்த மாதத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் வரிசையில் இங்கிலாந்து அணி ஒன்பதாவது இடத்தில் இருந்ததை வைத்து பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க : 25 பந்து.. 10 சிக்ஸ்.. 314 ஸ்ட்ரைக் ரேட்.. நொறுக்கிய இளம் வீரர்.. ரிங்கு சிங் அணி வெற்றி.. உபி டி20 லீக் 2024

இதுகுறித்து வாசிம் ஜாஃபர் பதில் அளிக்கும் போது ” டைமிங்தானே எல்லாமே. மேலும் மைக்கேல் வாகன் ஒரு புத்திசாலி என்கின்ற காரணத்தினால் இதை மிகச் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார். இதன் காரணமாகத்தான் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக தரவரிசை அடிப்படையில் டெஸ்ட் அணிகளை இரண்டு பிரிவாக பிரிக்க வேண்டும் என்று அவர் கூறவில்லை” என்று கேலி செய்திருக்கிறார்.

- Advertisement -